முகப்பு /செய்தி /உலகம் / புவியின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய அமெரிக்கா...

புவியின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய அமெரிக்கா...

ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ்

புவியின் சுற்றுவட்டப்பாதைக்கு விண்கலம் அனுப்ப தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒரு காலத்தில் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குச் சாதனையாக இருந்தது விண்வெளிப் பயணங்கள். பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்குச் சென்று வர முடியும் என்ற நிலையை இப்போது சில தனியார் நிறுவனங்கள் மாற்றியுள்ளன. அமெரிக்காவில் இப்போது விண்வெளிச் சுற்றுலா மிகவும் பிரபலமாகி வருகிறது.

இந்தப் பயணத்திற்குக் கோடிக் கணக்கில் செலவாகும் என்றாலும், திரில்லான அனுபவத்தைப் பெறுவதற்காகவே விண்வெளிப் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். வெர்ஜின் கேலக்டிக், புளு ஆர்ஜின் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே சாதாரண பொதுமக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளன.

அந்த வரிசையில் புவியின் சுற்று வட்டப்பாதைக்கு விண்கலங்களை அனுப்பும் முயற்சியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான பொக்கா சிக்கா ராக்கெட் ஏவுதளத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. புவியின் சுற்று வட்டப்பாதைக்குத் தனியார் நிறுவனம் விண்கலத்தை அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.

இத்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டி ஏவுவதற்குத் தயாராக விண்கலம் இருக்கும் போது, இதற்கான அனுமதி கேட்டு எலன் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அமெரிக்க நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையிடம் விண்ணப்பித்தது. கடந்த சில நாட்களாக விண்ணப்பம் தொடர்பான விசாரணை நீடித்து வந்தது. விண்கலத்தின் கட்டுமானம், பாதுகாப்பு அம்சங்கள், பொருளாதாரம் தொடர்பான விபரங்கள், உள்ளிட்ட அனைத்து சாதக பாதங்கள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இறுதியில் விண்கலத்தைப் புவியின் சுற்று வட்டப்பாதைக்கு அனுப்ப எஃப்ஏஏ எனப்படும் அமெரிக்க ஏவியேசன் துறை அனுமதி வழங்கியது. அனுமதி கிடைத்ததை தொடர்ந்து விண்கலத்தை சுமந்துகொண்டு ராக்கெட் அனுப்பும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வரும் திங்கட்கிழமை டெக்சாசில் இருக்கும் பொக்கா சிக்கா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்கலம் அனுப்பப்பட உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

Also Read : தொப்பை ஆண்களை விரும்பும் பெண்கள்... எத்தியோப்பியாவில் பழங்குடியினரின் விநோத வழிமுறை..

திங்கட்கிழமை காலை 5.30 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிக்குள் எந்த நேரத்திலும் ராக்கெட் ஏவப்படலாம் எனத் தெரிகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் புவியின் சுற்று வட்டப்பாதைக்கு வணிக ரீதியில் விண்கலப் போக்குவரத்தை நடத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தனியார் நிறுவனத்தின் டாக்சி சேவையைப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவின் நாசாவும் திட்டமிட்டுள்ளது.

top videos

    இதனால் சமானிய மக்களும் விண்வெளிப் பயணம் மேற்கொள்வதும் சாத்தியமாகும். இந்தியாவிலும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயணங்கள் மேற்கொள்ளத் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் இந்தியாவிலும் விண்வெளி சுற்றுலாவைத் தனியார் நிறுவனங்கள் நடத்தத் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Space, Tourism