தனிமை என்பது மிகவும் கொடுமையான விஷயம். பிற மக்களோடு சகஜமாக பழகாமல் தனிமையில் இருப்பது ஒரு நபருக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும், மேலும் இது பல வழிகளில் ஒருவரை கடுமையாக பாதிக்கும். தென் கொரியாவை பொறுத்த வரை அங்கு சமூகத்தோடு ஒன்றி வாழாமல் தனிமையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக அந்நாட்டில் நிலவும் அதிக பணவீக்கம் காரணமாக பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாடுகின்றனர். அந்நாட்டில் 30 - 55 வயதுக்குட்பட்ட லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தனியே வசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்த சிக்கலை சரி செய்ய சமூகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக தென் கொரிய அரசு ஒரு புதிய முயற்சியை அறிவித்துள்ளது.
இதற்காக அந்த நாட்டின் பாலின சமத்துவம் மற்றும் குடும்ப அமைச்சகமானது, தனிமையில் இருக்கும் இளைஞர்கள் சமூகத்தோடு ஒன்றிணைய சுமார் 650,000 கொரியன் வோன் அல்லது மாதத்திற்கு சுமார் $500 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.41 ஆயிரம்) வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளது. இந்த நடவடிக்கை தனிமையில் வாடும் அந்நாட்டு இளைஞர்களுக்கு உளவியல் மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மை மற்றும் ஆரோக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்நாட்டின் larger Youth Welfare Support Act-ன் படி இந்த நிதியானது, சராசரி தேசிய வருமானத்தை விட குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களில் வசிக்கும் 9 - 24 வயதுடைய இளைஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
Read More : சாட் ஜிபிடி உதவியால் வீட்டுப்பாடம்.. ஈசியாக மாட்டிக்கொண்ட மாணவன்.. நடந்தது இதுதான்!
தென்கொரிய அமைச்சகத்தின் அறிக்கையின்படி, 19 - 39 வயதிற்குட்பட்ட தென் கொரியர்களில் தோராயமாக 3.1%பேர் (3,38,000 நபர்கள்) "தனிமையில் இருக்கும் இளைஞர்கள்" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்கிறார்கள் மற்றும் நீண்ட காலமாக சக மனிதர்களோடு பழகாமல் வெளி உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக தனிமையில் இருக்கும் இளைஞர்கள் மெதுவான உடல் வளர்ச்சி மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட பலவற்றால் பாதிக்கப்படலாம் என அறிக்கை கூறுகிறது.இந்த சூழ்நிலையில் தென்கொரிய அரசு அறிவித்துள்ள மாதாந்திர உதவித்தொகை local administrative welfare centre-ல் விண்ணப்பிக்கும் தனிமையில் இருக்கும் இளைஞர்கள் அல்லது அவர்கள் சார்பாக விண்ணப்பிக்கும் பாதுகாவலர்கள், ஆலோசகர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு கிடைக்கும்.
இதுபற்றி கூறி இருக்கும் அந்நாட்டை சேர்ந்த உயரதிகாரி ஒருவர் இடமாற்றம், மனநலப் பிரச்சனைகள், நிதி கஷ்டம், உறவுகளை உருவாக்குவதில் சிரமம், குடும்பப் பிரச்சனைகள் அல்லது உடல்நலச் சவால்கள் போன்ற பல காரணங்களால் நாள்பட்ட தனிமை மோசமடையலாம். எனவே இந்த மாதாந்திர நிதி வழங்கும் முயற்சி இளைஞர் நலன் ஆதரவு சட்டத்தின் கீழ் வருகிறது. இது தவறு செய்யும் ஆபத்தில் இருக்கும் அல்லது சரியான ஆதரவு அமைப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை மூலம் தனிமையில் இருக்கும் இளைஞர்கள் மீண்டும் சமூகத்தில் மறுவாழ்வு பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
ஏற்கனவே அந்நாட்டின் சில நகரங்கள் மற்றும் மாகாணங்களில் இதே போன்ற ஆதரவு திட்டங்கள் உள்ளன. தலைநகர் சியோலில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு மனநல ஆலோசனை, பொழுதுபோக்கு மேம்பாடு மற்றும் பணிப் பயிற்சி மற்றும் வாழ்க்கைப் பயிற்சி ஆகியவற்றை வழங்கும் திட்டம் செயலில் உள்ளது. தென் கொரியாவில் தற்கொலை அதிகரித்து கொண்டே போகும் சூழலில் உலகளவில் அதிகம் தற்கொலை செய்து கொண்டுள்ளவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது தென்கொரியா. குறிப்பாக அங்கு இருக்கும் Mapo Bridge மரண பாலம் என குறிப்பிடப்படும் அளவிற்கு தற்கொலைகளை கண்டு வருகிறது. இந்த சூழலில் தான் மாதாந்திர நிதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Commit suicide, South Korea