பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஒன்பதாம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த போது, அவரை துணை ராணுவமான ரேஞ்சர்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் உட்பட பல ராணுவ தளங்களை இம்ரான் கானின் கட்சியினர் சேதப்படுத்தினர்.
இந்நிலையில், நாச வேலைகளை செய்துவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் இம்ரான் கான் நாடகமாடுவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சரான கவாஜா ஆசிஃப் குற்றம்சாட்டினார். இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சிக்கு தடை விதிப்பது குறித்து தீவிரமாக பரிசீலனை நடந்து வருவதாகவும், இம்ரானின் கட்சியை தடை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தால், அந்த தீர்மானம் நிச்சயம் நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க... மீண்டும் ஒரு ஊரடங்கு...? கொரோனாவை விட கொடிய வைரஸ் பரவ வாய்ப்பு... WHO எச்சரிக்கை...!
இந்நிலையில், தனது கட்சியில் இருந்து விலகும்படி மூத்த தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார். வருகிற அக்டோபர் மாதம் தேர்தல் நடத்துவது குறித்தும், அரசியலில் இருந்து விலகுவது குறித்தும் அதிகாரத்தில் உள்ள யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Imran khan, Pakistan Army