சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு இடையே தொடர்பு கொள்ளவும், உறவாடவும் பாலமாக இருந்தாலும், இதன் மூலமாக பல்வேறு குற்றச் செயல்களும் பெருகி வருகின்றன. குறிப்பாக, இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பல சமூக விரோதிகள் திட்டம் தீட்டி பாலியல் குற்றங்கள், நிதி மோசடிகள் போன்ற பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய அதிர்ச்சி சம்பவம் ஒன்று பின்லாந்து நாட்டில் நிகழ்ந்துள்ளது.
அங்குள்ள பிர்கன்மா என்ற பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஜெசி நிகோ கிறிஸ்டின் எர்கோனென். போதை பொருளுக்கு அடிமையான இவர் பாலியல் ரீதியான தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர். இந்நிலையில், சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி சிறுமிகளை குறிவைத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நடவடிக்கைகளில் இவர் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார்.
ஸ்னேப்சாட் சமூக வலைத்தளம் மூலம் 12 முதல் 17 வயது சிறுமிகளை குறிவைத்து அவர்களுக்கு ரெக்வஸ்ட் கொடுத்து பழகத் தொடங்கியுள்ளார். அவர்களிடம் ஆசையாக பேசி பார்ட்டி தருகிறேன் நேரில் சந்திக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இவரின் பேச்சை நம்பி வலையில் விழுந்த சிறுமிகளிடம் அத்துமீறி பாலியல் உறவுகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், சில சிறுமிகளிடம் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை கொடுத்து அவர்களையும் போதை பழக்கத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
பல சிறுமிகளிடம் அவர்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்து அதை ஸ்னேப்சாட்டில் அனுப்புங்கள் எனக் கேட்டு வாங்கியுள்ளார். இவ்வாறு 11 வயது சிறுமி உட்பட பல சிறுமிகளிடம் புகைப்படங்கள், பாலியல் வீடியோக்களை பெற்று அவர்களை பிளாக்மெயில் செய்யும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு ஊரடங்கு...? கொரோனாவை விட கொடிய வைரஸ் பரவ வாய்ப்பு... WHO எச்சரிக்கை...!
இவர் மீது பள்ளி மாணவிகள் 10 பேர் முதலில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் இவரை பிடித்து விசாரித்ததில் சுமார் 120 சிறுமிகளிடம் இத்தகைய பாலியல் குற்றங்களில் அவர் ஈடுபட்டது அம்பலமானது. அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிமன்றம் 10 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Sexual abuse