முகப்பு /செய்தி /உலகம் / சீரியல் கொலையா? 6 இளம் பெண்கள் அடுத்தடுத்து மர்ம மரணம்.. அமெரிக்காவில் மக்கள் பீதி!

சீரியல் கொலையா? 6 இளம் பெண்கள் அடுத்தடுத்து மர்ம மரணம்.. அமெரிக்காவில் மக்கள் பீதி!

6 பெண்கள் கொலை

6 பெண்கள் கொலை

அமெரிக்காவில் 150 கிமீ சுற்றுவட்டாரத்தில் 6 பெண்கள் அடுத்தடுத்து மர்மான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, Indiaoregonoregon

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் போர்ட்லாந்து என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தை சுற்றி கடந்த பிப்ரவரி மாதம் முதல் பெண்கள் அடுத்தடுத்து மர்மான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது சீரில் கொலையாக இருக்குமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், விசாரணையும் அதே கோணத்தில் நடைபெறத் தொடங்கியுள்ளது. முதலாவதாக கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அன்று தென்கிழக்கு போர்ட்லாந்து பகுதியில் உள்ள பிலெசன்ட் பள்ளத்தாக்கு பகுதியில் 22 வயதான கிரிஸ்டன் ஸ்மித் என்ற பெண்ணின் உடல் பகுதிகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த இளம்பெண்ணின் மரணத்தின் காரணம் இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்ததாக ஏப்ரல் 8ஆம் தேதி அன்று கிளார்க் கவுன்டி என்ற பகுகியில் ஜோனா ஸ்பீக்ஸ் என்ற பெண்ணின் உடல் ஒரு பாழடைந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் சடலத்தின் தலை மற்றும் கழுத்து பகுதிகளில் காயங்கள் இருந்த நிலையில், கொலையாளி உடலை அந்த இடத்தில் போட்டு சென்றிருப்பார் என்று தெரியவந்தது.

தொடர்ந்து ஏப்ரல் 24ஆம் தேதி அன்று இரு பெண்களில் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலம்பியா ரிவர் ஹைவேயில் 24 வயது சாரிட்டி லின் என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதேநாளில் லென்ட்ஸ் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணின் வயது 25 முதல் 40க்குள்ளாக தான் இருக்கும் என்ற நிலையில், அவரை அடையாளம் கானும் முயற்சி நடைபெறுகிறது.

இந்நிலையில், கடைசியாக ஏப்ரல் 30ஆம் தேதி அன்று 31 வயதான பிரிட்கெட் லியான் என்ற பெண்ணின் உடல் நார்த்வெஸ்ட் போல்க் கவுன்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பெண் மில்வாய்கே பகுதியை சேர்ந்தவர் எனவும் அடிக்கடி போர்ட்லாந்துக்கும் வந்து செல்வார் எனவும் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க: 2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த வடகொரியா.. பகீர் காரணம் இதோ

இவ்வாறு அடுத்தடுத்து 6 பெண்கள் ஒரே சுற்றுவட்டாரத்தில் மர்மான முறையில் மரணமடைந்தது அப்பகுதியினர் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது. இந்த கொலைகள் அனைத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதாக, இது சீரியல் கொலை சம்பவமா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Murder case, USA