முகப்பு /செய்தி /உலகம் / பள்ளிக்குள் திடீரென துப்பாக்கி எடுத்து சுட்ட 7ஆம் வகுப்பு மாணவன்.. 9 பேர் பலி

பள்ளிக்குள் திடீரென துப்பாக்கி எடுத்து சுட்ட 7ஆம் வகுப்பு மாணவன்.. 9 பேர் பலி

செர்பியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு

செர்பியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு

செர்பியாவில் பள்ளியில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சக மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

  • Last Updated :
  • inter, IndiaBelgrade Belgrade

மேற்கத்திய நாடுகளில் துப்பாக்கி கலாசாரம் சமீப காலமாக தலைத்தூக்கியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பொதுவெளிகளில் குறிப்பாக கல்வி நிலையங்களில் தூப்பாக்கிச் சூடு வன்முறை சம்பவங்கள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அப்படி ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று ஐரோப்பிய நாடானா செர்பியாவில் நடைபெற்றுள்ளது.

செர்பியாவின் தலைநகரான பல்கிரெடி மாணகணத்தில் விரகார் பகுதியில் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று வழக்கம் போல மாணவ மாணவியர் வகுப்பறையில் பாடம் கற்றுக்கொண்டிருந்த போது, அங்கு 7 வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட ஆரம்பித்தார்.

ஆசிரியர்கள் மாணவர்கள் என எதிரில் இருந்த அனைவரையும் கண்முன் தெரியாமல் சுடத் தொடங்கியதால் பள்ளி வளாகமே களோபரமானது. மாணவன் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பாதுகாவலர் என 9 பேர் பலியாகினர். மேலும், 6 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் 2009இல் பிறந்த 14 வயதே ஆன சிறார். இவர் தனது தந்தையின் துப்பாக்கியை பள்ளிக்கு எடுத்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கேள்விபட்டதும் பள்ளிக்கு பெற்றோர் பதற்றத்துடன் விரைந்தனர்.

இதையும் படிங்க: பறக்கும் விமானத்தில் பாலியல் தொல்லை தந்தார்... ட்ரம்ப் மீது 81 வயது மூதாட்டி பரபரப்பு புகார்..!

பள்ளி வளாகம் முழுவதும் காவல்துறையால் சீலிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மாணவன் அமைதியானர், நல்ல பையன் என்றே அனைவராலும் அறியப்பட்டுள்ளனர். அப்படி இருக்கு சம்பவத்திற்கான காரணம் என்னவென்று காவல்துறை விசாரித்து வருகிறது.

First published:

Tags: Gun fire, Gun shoot, School boy, Serbia