முகப்பு /செய்தி /உலகம் / பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவன்... 8 மாணவர்கள் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவன்... 8 மாணவர்கள் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

செர்பியா பள்ளி துப்பாக்கிச்சூடு

செர்பியா பள்ளி துப்பாக்கிச்சூடு

துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • Last Updated :
  • international, IndiaSerbiaSerbiaSerbia

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான செர்பியாவில் பள்ளிக்குள் நுழைந்து 14 வயது சிறுவன் நடத்திய கண்மூடித்தமான துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

அந்நாட்டு தலைநகர் பெல்கிரேடில் உள்ள Vladislav Ribnikar school என்ற ஆரம்ப தொடக்க பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், பள்ளி பாதுகாவலர் மற்றும் 8 மாணவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஆசிரியர் உட்பட 6 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை கைது செய்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் வாசிக்கசம்பளம் தரவில்லை... அமைச்சரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பாதுகாவலர்...!

பள்ளியில் மிகவும் அமைதியாக இருந்த மாணவர், திடீரென்று துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக ஆசிரியர்களும், சக மாணவர்களும் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

top videos
    First published:

    Tags: Gun shoot