முகப்பு /செய்தி /உலகம் / சொந்த நாட்டின் மீதே போர் விமானம் குண்டு வீச்சு... போரில் ரஷ்யாவுக்கு வந்த சோதனை

சொந்த நாட்டின் மீதே போர் விமானம் குண்டு வீச்சு... போரில் ரஷ்யாவுக்கு வந்த சோதனை

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் ஒரு வருடங்கள் கடந்து நடந்துகொண்டு இருக்கிறது.

  • Last Updated :
  • international, IndiaRussia Russia

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் போர் விமானம் ஒன்று தவறுதலாகச் சொந்த நாட்டின் நகரத்தின் மீதே குண்டு வீசியதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது. நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் முடிவெடுத்ததை எதிர்த்து ரஷ்யா கிட்டத்தட்ட 14 மாதங்களாக உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. தொடர்ந்து ஆக்ரோஷமாக உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் கடுமையான தாக்குதலைச் சிறிய நாடான உக்ரைன் தாங்கிவருவதோடு பதிலடியும் கொடுத்து வருகிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி அளிப்பதால் ரஷ்யாவை எதிர்த்து முழு வீச்சுடன் சண்டையிட்டு வருகிறது. உக்ரைனின் சில பகுதிகளை மட்டுமே கைப்பற்றினாலும் போரில் முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போராடி வருகிறது ரஷ்யா. உரியக் காரணம் இல்லாமல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதாகவும், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியது.

ஆனாலும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை. போரினால் உணவு தானியம், உரம், கனிமம் உள்ளிட்ட ஏற்றுமதி, இறக்குமதி போன்றவை பாதிக்கப்பட்டு உலக பொருளாதாரத்திலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தற்போது உக்ரைன் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா தனது சுகோய் 34 போர் விமானம் மூலம் உக்ரைனுக்குள் குண்டு மழை வீசத் திட்டமிட்டு இருந்தது. ஆனால், தவறுதலாக சில குண்டுகள் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய நகரங்கள் மீது விழுந்தன.

உக்ரைன் - ரஷ்யா எல்லையில் இருக்கும் பெல்கோரட் என்ற நகரத்தில் தான் இந்த குண்டுகள் விழுந்தன. பலத்த சத்தத்துடன் விழுந்த குண்டுகளால் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதம் அடைந்தன. குண்டு விழுந்ததில் ஒரு கார் வெடித்துச் சிதறியது. ஒரு கடையின் மேற்கூரை முற்றிலும் உருக்குலைந்தது. குண்டு விழுந்த இடத்தில் 20 மீட்டர் அளவுக்குப் பெரிய பள்ளமும் ஏற்பட்டது. இந்த குண்டு வீச்சில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சில குடியிருப்பு கட்டிடங்களும் சேதம் அடைந்தன.

Also Read : இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை... அதிக் அகமது கொலைக்கு பஹ்ரைன் கண்டனம்

top videos

    தவறுதலாக இந்த தாக்குதல் நடந்து விட்டதாக ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் உரிய விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சொந்த நாட்டுப் போர் விமானமே தங்கள் மீது குண்டு வீசியதால் எல்லையோரத்தில் இருக்கும் நகரங்களில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    First published:

    Tags: Russia, Russia - Ukraine, War