முகப்பு /செய்தி /உலகம் / பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை... புதின் அரசு உத்தரவு

பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை... புதின் அரசு உத்தரவு

பராக் ஒபாமா

பராக் ஒபாமா

உக்ரைன் போரில் அமெரிக்காவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த ரஷ்யா இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

  • Last Updated :
  • inter, IndiaMoscowMoscow

முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட 500 அமெரிக்க பிரபலங்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான பூசல் உக்ரைன் போருக்குப் பின்னர் அதிகரித்துள்ள நிலையில், இந்த உத்தரவை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அரசு வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டீபன் கால்பெர்ட், ஜிம்மி கெம்மல், செத் மேயர்ஸ் போன்ற முன்னணி தொலைக்காட்சி பிரபலங்களும் இதில் அடக்கம்.

அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து தடை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக இந்த நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

ரஷ்யாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தக்க பதிலடி வழங்கப்படும் என்பதை அமெரிக்கா உணர வேண்டும். தடைக்கு ஆளான நபர்கள் ரஷ்யாவுக்கு எதிரான போலிக் கருத்துக்களை பரப்பியுள்ளனர். இதில் உள்ள சிலரின் நிறுவனங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி வருகின்றன என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குடும்பத்தில் மட்டுமே 15000 பேராம்.. கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பணம்.. உலகின் பணக்கார அரச குடும்பங்களின் லிஸ்ட்!

முன்னதாக உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு பொருளாதார நெருக்கடி தரும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக தடை உத்தரவை அமெரிக்க அரசு விதித்து. மேலும், உக்ரைன் நாட்டிற்கு நவீன ஆயுதங்களை உதவி ரஷ்யாவை எதிர்த்து போரிட அமெரிக்க உதவி வருகிறது. இது ரஷ்யாவுக்கு எரிச்சலுட்டி வரும் நிலையில், தன் பங்கிற்கு இத்தகைய தடை நடவடிக்கைகளை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது.

top videos
    First published:

    Tags: Barack Obama, Russia