இன்றைய காலகட்டத்தில் குடும்பம், குழந்தைகள், என்று எல்லா பொறுப்புகளும் இருந்தாலும் நிம்மதியான வாழ்க்கை என்பதை நோக்கி மக்கள் நகர ஆரம்பித்து விட்டனர். நான்கு சந்ததிகளுக்கு சம்பாதித்து சேர்த்து வைக்கும் பழக்கம் இன்றைய இளைய சமூகத்திடம் குறைந்து வருகிறது. பிரீலான்ஸ் வேலை செய்து வாழ்தல் போதுமானது என்று இருக்கின்றனர்.
அப்படி பிரீலான்ஸ் வேலை செய்யும் கலைஞர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய நகரங்களை ஸ்வீடனின் ஆம்ஸ்டர்டாம் நகரைச் சேர்ந்த ஒரு இணையதளம் ஆராய்ந்து பட்டியலிட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்து சுமார் 117 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் அடிப்படையில் ஒரு பட்டியலும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் உலகின் மிகவும் வசதியான நகரமாக செக் குடியரசு நாட்டின் தலைநகரமான பிராக்(Prague) இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்திருந்த போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த லிஸ்பன்(Lisbon) நகரம் இந்த ஆண்டு பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. பட்டியலில் 2 ஆவது இடத்தில் ஸ்பெயினின் செவில்லே(Seville) உள்ளது
வாழ்கை தரம் மற்றும் பணத் தேவையை வைத்து பட்டியலிடப்பட்ட நகரங்களில் முதல் இடம் பிடித்துள்ள செக் நாட்டு தலைநகரான பிராக், குறைந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை, கிரியேட்டிவ் சுதந்திரம், இணையவசதி என அனைத்திலும் முன்னேறி உள்ளது.
அதுமட்டும் அல்லாமல், தாய்லாந்தின் சியாங் மை, பேங்காக் பாலி ஆகிய இடங்களை விட சுத்தம், பாதுகாப்பு, பேச்சு சுதந்திரம், பொதுப் போக்குவரத்து, தரமான காபி, உணவு என அனைத்து விஷயங்களிலும் பிராக் முன்னிலை பெற்றுள்ளது.
பிராக் நகரம் வழியாக வில்தாவா ஆறு பாய்கிறது. பிராக் மாநகரில் சுமார் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். 1992 முதல் இந்நகரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் உள்ளது. கலாச்சார செழுமை கொண்ட இந்த நகரம் "நூறு கோபுரங்களின் நகரம்" என்ற புனைப்பெயரைக் கொண்டுள்ளது.
1992-ம் ஆண்டு நாளிதழ் வேலைக்காக செக் நாடு சென்று அங்கே திருமணமாகி 1994-ம் ஆண்டு பிராக்கில் செட்டிலாகி வாழ்வும் எழுத்துமாக வாழ்ந்து வரும் பத்திரிகையாளரான தோர் கார்சியா தந்து, “உண்மையில் இப்படி வாழ முடியுமா என்பதே ஆச்சரியமாக உள்ளது" என்று பெருமிதம் கொள்கிறார்.
இதையும் பாருங்க: உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்.. தொடர்ந்து 6 ஆண்டுகளாக பின்லாந்து முதலிடம்!
நீங்களும் குறைவான செலவில் நிம்மதியான அதே நேரம் சந்தோஷமான வாழ்க்கை வாழ விரும்பினால் இந்த பிராக் நகரத்திற்கு சென்று வாழ்த்து பாருங்க...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.