முகப்பு /செய்தி /உலகம் / ''இன்னும் உயிரோடு இருக்கிறேன்'' - உடல்நலம் தேறிய போப் பிரான்சிஸ் நகைச்சுவை பேச்சு

''இன்னும் உயிரோடு இருக்கிறேன்'' - உடல்நலம் தேறிய போப் பிரான்சிஸ் நகைச்சுவை பேச்சு

போப்

போப்

Pope Francis : போப் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தோலிக்க கிறிஸ்துவ தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நலம் பெற்று, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

86 வயதாகும் போப் பிரான்சிஸ், மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக கடந்த புதன்கிழமை ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு சுவாச நோய்த் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனா தொற்று இல்லை என்றும் கூறப்பட்டது. இருப்பினும், சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி, போப் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

போப் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், உடல் நலம் பெற்ற போப், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். குருத்தோலை ஞாயிறை ஒட்டி நடைபெற உள்ள வழிபாடு கூட்டத்தில் போப் பிரான்சிஸ் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Pope Francis