முகப்பு /செய்தி /உலகம் / இம்ரான்கான் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த போலீஸ்... ஆதரவாளர்கள் மீது தாக்குதல்..!

இம்ரான்கான் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்த போலீஸ்... ஆதரவாளர்கள் மீது தாக்குதல்..!

இம்ரான்கான் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய காவல்துறையினர்

இம்ரான்கான் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய காவல்துறையினர்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் லாகூர் இல்லத்துக்குள் புகுந்த காவல்துறையினர், அவரது வீடு மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • intern, IndiaPakistanPakistan

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் 2018ம் ஆண்டு இருந்தபோது, வெளிநாட்டுத் தலைவர்கள் அளித்த விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைப் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள ஜி-11 நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக இம்ரான்கான் தனது காரில் புறப்பட்டுச் சென்றார்.

இந்நிலையில், தமது கார் விபத்துக்குள்ளானதால் தாமதமாக நீதிமன்றத்துக்குச் செல்வதாக வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அனைத்து வழக்குகளிலும் தாம் ஜாமீன் பெற்றிருந்தாலும், தம்மைக் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்படுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்தைத் தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லாகூரில் உள்ள இம்ரான்கான் இல்லத்துக்குள் வெளியில் அவரை கைது செய்வதற்காக போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தனர். இம்ரான் கானை கைது செய்வதை எதிர்த்து அவரின் ஆதரவாளர்கள் வீட்டின் வெளியில் இருந்தனர்.

Also Read : ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 14 பேர் உயிரிழப்பு.. அச்சத்தில் உலக நாடுகள்..!

தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் வீட்டில் நுழைந்துள்ளனர், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அப்பகுதியில் இருந்த மரங்கள் மற்றும் தடுப்புகளை அகற்றினர். வீட்டில் இம்ரான்கான் மனைவி புஷாரா பேகம் மட்டும் தனியாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், வீட்டுக்குள் நுழைந்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

இதனிடையே நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான்கான் மீதான பிடிவாரண்டை நீதிமன்றம் ரத்து செய்தது.

First published:

Tags: Imran khan