முகப்பு /செய்தி /உலகம் / பிரதமர் மோடியை காலில் விழுந்து வரவேற்ற பப்புவா நியூ கினியா பிரதமர்..!

பிரதமர் மோடியை காலில் விழுந்து வரவேற்ற பப்புவா நியூ கினியா பிரதமர்..!

பப்புவா நியூ கினியாவில் பிரதமர் மோடி

பப்புவா நியூ கினியாவில் பிரதமர் மோடி

பப்வா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மராப்பே-வை இன்று காலை சந்தித்த நரேந்திர மோடி, இருதரப்பு பேச்சு நடத்தினார்.

  • Last Updated :
  • internat, IndiaPapua New GuineaPapua New GuineaPapua New Guinea

பப்புவா நியூ கினி-க்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் காலில் விழுந்து வரவேற்றார்.

ஜப்பான், பப்வா நியூ கினி, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் பயணத்தின் முதல் கட்டமாக, ஜப்பானுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட அவர், உக்ரைன் அதிபர், பிரிட்டன் பிரதமர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினார். மேலும், குவாட் மாநாட்டிலும் பங்கேற்றார்.பின்னர் அணிவகுப்பை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் நரேந்திர மோடி இன்று கலந்துகொள்கிறார். மேலும், நியூசிலாந்து பிரதமரையும் சந்தித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து, பப்புவா நியூ கினியில் பேசப்படும் டோக் பிசின் (tok pisin) மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட திருக்குறள் பதிப்பையும் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்நிலையில், பப்வா நியூ கினி பிரதமர் ஜேம்ஸ் மராப்பே-வை இன்று காலை சந்தித்த நரேந்திர மோடி, இருதரப்பு பேச்சு நடத்தினார்.

top videos
    First published:

    Tags: Narendra Modi