முகப்பு /செய்தி /உலகம் / நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்களுக்கு எச்சரிக்கை

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்களுக்கு எச்சரிக்கை

மாதிரி படம்

மாதிரி படம்

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaNew ZealandNew Zealand

நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும் என தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூசிலாந்தின் கெர்ம்டெக் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவானதால், அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு நியூசிலாந்தை சுற்றியுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் நியுசிலாந்திற்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்றும், நிலநடுக்கம் வலுவாக இருந்தால், மக்கள் வெளியேற தயாராக இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

First published:

Tags: Earthquake, Tsunami