பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளன. இதில் 2 வழக்குகளில் பிணையை நீட்டிக்கக் கோரி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜரான போது, ராணுவத்தினர் அவரை அதிரடியாக கைது செய்தனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இம்ரான் கான் தரப்பில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், என்.ஏ.பி எனப்படும் தேசிய பொறுப்புடமை அமைப்பு (National Accountability Bureau )) நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டியது.
இதையும் வாசிக்க: இம்ரான்கான் கைது எதிரொலி... வாகனங்களுக்கு தீ, துப்பாக்கிச்சூடு... போர்க்களமான பாகிஸ்தான்..!
நாட்டில் உள்ள அனைவருக்கும் நீதிமன்றத்தை அணுகும் உரிமை உள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், முன் அனுமதியின்றி இம்ரான் கானை கைது செய்யததாக சாடியது. மேலும் நீதிமன்ற ஊழியர்களும் சட்டவிரோதமாக செயல்பட அனுமதித்ததாக உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியது. இம்ரான் கானை ஒரு மணிநேரத்திற்குள் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, இம்ரான்கான் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Imran khan, Pakistan Army, PM Imran Khan