முகப்பு /செய்தி /உலகம் / இலவச கோதுமை வாங்க குவிந்த கூட்டம்... நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாப பலி.. பாகிஸ்தானில் தொடரும் சோகம்..!

இலவச கோதுமை வாங்க குவிந்த கூட்டம்... நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாப பலி.. பாகிஸ்தானில் தொடரும் சோகம்..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

பாகிஸ்தானில் இலவச உணவு பொருட்களை வாங்க சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

  • Last Updated :
  • INTER, Indiapakistan

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசியப் பொருட்களான கோதுமை, அரிசி கிடைப்பதிலும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கராச்சியில் ரமலான் மாதத்தை ஒட்டி தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இலவச கோதுமை வழங்கியது.

இதனை வாங்க அப்பகுதியை சேர்ந்த சுமார் நூற்றக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் குவிந்தனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட பலர் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். கூட்ட நெரிசலில் மயங்கியவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Pakistan: Stampede at Ramzan Food Distribution Centre Kills 12 in Karachi

இருப்பினும் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உணவு வாங்க சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 21 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Pakistan News in Tamil