உலக நாடுகளை அச்சுறுத்தும் தலையாய பிரச்சனைகளில் பயங்கரவாத நிகழ்வுகளும் ஒன்று. மக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாத நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் நாடுகளின் பட்டியலை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Institute for Economics and Peace என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியல் என்ற பெயரில் இந்த ஆய்வறிக்கை வெளியகியுள்ளது.
2022ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பிரதான இடங்களை பிடித்துள்ளன. அத்துடன் கடந்தாண்டு ஆப்கானிஸ்தானை விட பாகிஸ்தானில் கூடுதல் பயங்கரவாத சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஆசியாவில் அதிகளவிலான பயங்கரவாத சம்பவங்கள் நடைபெறும் நாடு என்ற முதலிடத்தில் 2017இல் இருந்து ஆப்கானிஸ்தான் இருந்து வந்தது. கடந்தாண்டு ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளும் அளவிற்கு கூடுலதான பயங்கரவாத சம்பவங்கள் பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தான் நாட்டை பொறுத்தவரை 2021இல் 292 பேர் பயங்கரவாத சம்பவங்களால் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையானது 2022இல் 120 சதவீதம் உயர்ந்து 643 மரணங்களாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த மோசமான பட்டியலில் தெற்கு ஆசியாவில் முதலிடத்திலும், சர்வதேச அளவில் 6ஆவது இடத்திலும் உள்ளது.
இந்த பயங்கரவாத சம்பவங்களில் பலுசிஸ்தான் விடுதலை இயக்கம், தெரிக் இ தாலிபான் ஆகிய இரு அமைப்புகளும் கணிசமான தாக்குதல்களை நடத்தியுள்ளன. பாகிஸ்தான் பயங்கரவாத மரணங்களில் 36 சதவீதம் பலுசிஸ்தான் விடுதலை இயக்க அமைப்பு மூலமாக நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: லிபிய கிடங்கிலிருந்து டன் கணக்கில் மாயமான யுரேனியம்.. ஐநா தகவல்
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் மூலம் 74 சதவீத உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. பலுசிஸ்தான் விடுதலை இயக்கம், தெரிக் இ தாலிபான் அமைப்புகள் இரண்டையும் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Afghanistan, Pakistan News in Tamil, Terror Attack, Terrorists