முகப்பு /செய்தி /உலகம் / இங்கிலாந்தில் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்...!

இங்கிலாந்தில் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்...!

ஆலிவர் டவுடன்

ஆலிவர் டவுடன்

இங்கிலாந்தின் புதிய துணைப் பிரதமரைப் பிரதமர் ரிஷி சுனக் நியமித்துள்ளார்.

  • Last Updated :
  • international, IndiaUnited KingdomUnited Kingdom

இங்கிலாந்தின் துணை பிரதமராக இருந்த டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவரது பதவிக்கு ஆலிவர் டவுடன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை அமைச்சருமான டொமினிக் ராப், தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மரியாதை குறைவாகவும், கொடுமைப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை மூத்த வழக்கறிஞர் ஆடம் டாலி, பிரதமர் ரிஷி சுனக்கிடம் ஒப்படைத்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், துணை பிரதமர் டொமினிக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Also Read : பெண்களுக்கு ஆதரவு.. தலிபான்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்த ஐநா.!

top videos

    இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள டொமினிக் ராப், ஏற்கெனவே கூறியபடியே விசாரணைக்கு பிறகு ராஜினாமா செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், டொனிமிக் ராப் மீது முழு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் ரிஷி சுனக், விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மையையும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய துணை பிரதமராக, ஆலிவர் டவுடன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    First published:

    Tags: England, UK