அண்மைக்காலமாகவே ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்காவையும், தென்கொரியாவையும் சீண்டி வந்த வடகொரியா தற்போது நேரடியாகப் போருக்குத் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் சர்ச்சைகளின் நாயகனான இவர் வடகொரியாவில் கிட்டத்தட்டச் சர்வாதிகார ஆட்சி தான் நடத்தி வருகிறார். வடகொரியாவின் அருகில் இருக்கும் தன்னாட்சி நாடான தென்கொரியாவை அடிக்கடி கிம் சீண்டிப் பார்த்து வருகிறார்.
அந்நாட்டு வான் வெளியில் ராணுவ போர் விமானங்களைப் பறக்க விடுவது, அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்துவது என கிம் எப்போதும் தென்கொரியாவைச் சீண்டிக் கொண்டே இருக்கிறார். தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கி அவ்வப்போது வடகொரியாவைக் கண்டித்து வருகிறது. இதனால் தென் கொரியா மீது மட்டுமல்ல அமெரிக்கா மீதும் கிம் ஜோங் உன் கடுப்பில் இருக்கிறார்.
இது தொடர்பாக அமெரிக்கா, வடகொரியா இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளலாம் என்ற பதற்றம் நிலவி வருகிறது. இதற்காக வடகொரியாவும் தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதற்காக ராணுவ பலத்தை அதிகரிக்க வடகொரியா கட்டாய ராணுவ ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவுடனான போரை எதிர்கொள்ளத் தொழிலாளர்கள், மாணவர்கள் என 8 லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளார் கிம். மேலும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஜப்பான் கடல் பகுதியில் இருந்து ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது வடகொரியா.
இரு நாடுகளுக்கிடையில் போர் மூண்டால் அணு ஆயுதத்தை அமெரிக்காவுக்கு எதிராகப் பயன்படுத்தும் எண்ணத்திலும் இருக்கிறாராம் கிம் ஜோங் உன். இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. தென்கொரியாவும், அமெரிக்காவும் சேர்ந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த அணு ஆயுத ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது அந்த ஏவுகணை 800 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று இலக்கை அழித்துள்ளது.
வடகொரிய இந்த பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதை இந்நாட்டு ஊடகமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் சூழ்நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள்.
ஏனென்றால் ஏற்கனவே ஒரு ஆண்டைக் கடந்தும் நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போர் உலகப் பொருளாதாரத்தை ஒரு கை பார்த்திருக்கிறது. இந்நிலையில் மற்றுமொரு போர் மூண்டால் அது உலக நாடுகள் அனைத்திலுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தான் வடகொரிய-அமெரிக்கா இடையே போர் மூள்வது தடுக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் விரும்புகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kim jong un, North korea, Nuclear