முகப்பு /செய்தி /உலகம் / தண்ணீருக்குள் பாயும்.. அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா.. வீடியோவை வெளியிட்ட அரசு!

தண்ணீருக்குள் பாயும்.. அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா.. வீடியோவை வெளியிட்ட அரசு!

தொலைகாட்சியில் வெளியிடப்பட்ட வீடியோ

தொலைகாட்சியில் வெளியிடப்பட்ட வீடியோ

புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ள வடகொரியா அது தொடர்பான வீடியோவை தனது ஊடககங்களில் வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • inter, IndiaNorth koreaNorth koreaNorth korea

வடகொரியா ஏவுகணை சோதனைகளின் நீட்சியாக, நீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தும் அதிநவீன ஏவுகணையை சோதித்துள்ளது. இந்த வீடியோவை வடகொரியா ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து தென் கொரிய பிராந்தியத்தில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வடகொரியா, அடுத்தடுத்து ஏவுகணைகளை சோதித்தது. கடந்த 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த சோதனைகளை தென் கொரியாவும் உறுதிப்படுத்திய நிலையில், இதுதொடர்பான படங்களை வடகொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், வடகொரியாவின் அணு சக்தி போர் திறன் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இது எச்சரிக்கையாக இருக்கும் வடகொரியா ராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

top videos

    இதற்கிடையே, எதிரிநாட்டு கப்பல்கள் மற்றும் துறைமுகங்களை குறிவைத்து நீருக்கடியில் சென்று தாக்குதல் நடத்தும் அதிநவீன ஏவுகணையை சோதித்து வடகொரியா அண்டைநாடுகளை அதிரவைத்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் தற்போது நடந்து வரும் சூழலில், வடகொரியாவின் இந்த சோதனையும் உலக நாடுகளை அச்சுறுத்தியுள்ளது.

    First published:

    Tags: Kim jong un, North korea