தனது அதிரடி நடவடிக்கைகளால் உலக நாடுகளை அடிக்கடி பீதிக்குள்ளாக்கும் நபர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன். கொரிய தீபகற்பத்தை மையமாகக் கொண்டு வடகொரியாவுக்கும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் நீண்டகாலமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வடகொரியா-தென்கொரியா இடையேயான மோதலில் தென்கொரியாவின் பக்கம் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் போன்றவை உள்ளன.
எனவே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை தரும் வகையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் யுன் தொடர்ச்சியாக பல பயங்கர ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறார். தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கொரிய பிராந்தியத்தில் நடத்திய கூட்டு ராணுவ பயிற்சிக்கு எதிராக வடகொரிய தற்போது அதிநவீன ஆயுதம் ஒன்றை வெற்றிகரமாக சோதித்தாக தெரிவித்துள்ளது.
அதன்படி, கடலுக்கு அடியில் ரேடியோ ஆக்டிவ் ஆயுதம் ஒன்றை ட்ரோன் மூலம் செலுத்தி 80 முதல் 150 மீட்டர் ஆழத்தில் அதை வெடிக்க வைத்துள்ளோம். இதன் மூலம் செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தினோம் என வடகொரிய தெரிவித்துள்ளது. இந்த சோதனை தலைவர் கிம் ஜாங் யுன் முன்னிலையில் நடைபெற்றதாகவும், இது வெற்றி பெற்றதால் அவர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்காவுடன் போருக்குத் தயாராகும் வடகொரியா… அணு ஆயுத யுத்தமாக மாறும் அபாயம்!
ஏற்கனவே கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவி வரும் வேளையில், இந்த வடகொரியாவின் பயங்கர ஆயுத சோதனை அமெரிக்கா மற்றும் தென்கொரிய நாடுகளை சீண்டியுள்ளது. இதற்கு வடகொரிய நிச்சயம் தக்க விலையை கொடுக்க வேண்டி வரும் என தென்கொரிய அதிபர் யுன் சுக் இயோல் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kim jong un, North korea, Tsunami