முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளம்பெண்…அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய இளம்பெண்…அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..

சிசிடிவி காட்சி

சிசிடிவி காட்சி

அமெரிக்காவில் பள்ளிக்குள் நுழைந்து இளம்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிர்ச்சி வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • internationa, IndiaAmericaAmerica

டென்னஸி மாகாணத்தில் நாஷ்வில்லே பகுதியில் இருக்கும் கிறிஸ்டியன் கவனன்ட் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. பள்ளியின் இரண்டாவது மாடிக்குச் சென்ற இளம் பெண் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளார். இதில் மூன்று மாணவர்கள் மற்றும் மூன்று பள்ளி ஊழியர்கள் என ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண்ணை சுட்டுக் கொன்றனர். படுகாயமடைந்த ஆறு பேரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை அளிப்பதற்குள் ஆறு பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் யார்? எதற்காகத் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் ஆண்ட்ரே ஹாலே என்பதும், 28 வயதான அந்தப் பெண் அதே பள்ளியின் முன்னாள் மாணவி என்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால் எதற்காக அந்தப் பெண் துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்த விபரங்கள் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்த போது அந்தப் பள்ளியில் பதிவான கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை தற்போது காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு சாவகாசமாக அந்தப் பெண் பள்ளிக்குள் நுழைந்து மூடியிருந்த கண்ணாடிக் கதவைத் துப்பாக்கியால் சுட்டு உடைத்துக் கொண்டு உள்ளே நுழைவதும், பிறகு ஒவ்வொரு அறையாகத் தேடிச் சென்று துப்பாக்கியால் சுடும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

Also Read : 3200 ஆண்டுகள் பழமையான தங்க கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள்..!

top videos

    இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பள்ளியில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர் பயந்துள்ளனர். டேவிட் ரீட்மேன் என்ற ஆராய்ச்சியாளரின் இணையதள தரவுகளின் படி இந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கி 3 மாதங்களுக்குள் அமெரிக்காவில் 89 பள்ளி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    First published:

    Tags: America, Gun shoot, Video