முகப்பு /செய்தி /உலகம் / தனியார் பள்ளியில் இளம்பெண் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி.. அமெரிக்காவில் பயங்கரம்!

தனியார் பள்ளியில் இளம்பெண் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி.. அமெரிக்காவில் பயங்கரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

America school gun shot | தனியார் பள்ளியில் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என தெரிகிறது.

  • Last Updated :
  • internat, Indiaamericaamerica

அமெரிக்காவில் தனியார் பள்ளியில் பெண் ஒருவர் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை சுட்டுக் கொன்றனர்.

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் உள்ள நாஸ்வில் பகுதியில் தனியார் கிறிஸ்தவப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு வரை சுமார் 200 பேர் படித்துவரும் நிலையில், பள்ளிக்குள் நுழைந்த பெண் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 3 மாணவர்களும், பெரியவர்கள் 3 பேரும் உயிரிழந்தனர்.

top videos

    தகவலறிந்து வந்த போலீசார், அந்த நபரை சுட்டுக் கொன்றனர். நாஸ்வில்லே பகுதியைச் சேர்ந்த அவர், 28 வயதுடையவர் என்று காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், ஆயுதங்கள் தடை சட்டத்தை நாடாளுமன்றம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    First published:

    Tags: America, Crime News, Gun shot, School