முகப்பு /செய்தி /உலகம் / சூரிய புயலால் ஆபத்து.. அதிர்ச்சியூட்டும் நாசாவின் எச்சரிக்கை - காப்பாற்றுமா AI ?

சூரிய புயலால் ஆபத்து.. அதிர்ச்சியூட்டும் நாசாவின் எச்சரிக்கை - காப்பாற்றுமா AI ?

சூரிய புயல்

சூரிய புயல்

பூமிக்கு வரும் ஆபத்து குறித்து நாசா விடுத்துள்ள எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பூமிக்கு எதிராக ஆபத்துகள் வந்து கொண்டிருக்கின்றன, உலகம் அழியப்போகிறது என அடிக்கடி வதந்திகள் வெளியாகி மக்களை அச்சமடைய செய்துவருகின்றன. குறிப்பாக வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் இத்தகைய தகவல்கள் பரவிவருகின்றன.

சிலர் முக்காலத்தை உணர்ந்தவர்கள் எனக் கூறிக்கொண்டு எதிர்காலத்தை கணித்து சொல்லி வருகின்றனர். ஆனால் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இத்தகைய எச்சரிக்கையை விடுக்கும்போதுதான் மக்கள் பீதியடைகின்றனர். நாசா விண்வெளியை துல்லியமாக கணித்து வருகிறது. எந்த கிரகம் நகர்கிறது, எந்த பாறை பூமிக்கு அருகில் வருகிறது என அனைத்து விஷயங்களையும் தெளிவாக கணித்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

இதையும் படிக்க |  குடும்பத்தில் மட்டுமே 15000 பேராம்.. கோடிக்கணக்கில் கொட்டிக்கிடக்கும் பணம்.. உலகின் பணக்கார அரச குடும்பங்களின் லிஸ்ட்!

இந்த நிலையில் நாசா வெளியிட்ட புதிய அறிவிப்பு மக்களின் இதயதுடிப்பை அதிகரித்துள்ளது. நாசாவின் கூற்றுப்படி பூமியின் அழிவுக்கு விண்வெளியில் ஏற்படும் அழிவுகள் காரணமாக இருக்கும். விண்வெளியில் உருவாகும் புயல் பூமியை தாக்கும். இந்த சூரிய புயலால் பூமியில் தீப்பிழம்புகள் உருவாகும். இதிலிருந்து மனிதர்கள் தப்பிக்க கூட வாய்ப்பில்லை, அரை மணி நேரத்தில் பூமி அழியத் தொடங்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதிலிருந்து தப்பிக்க ஆர்டிஃபீசியல் இண்டலிஜெண்ட் எனப்படும் AI உதவியுடன் இதற்கான முன்னெடுப்புகளை நாசா செய்யவுள்ளது. அதாவது விண்வெளியில் புயல் உருவானால் அது பூமிக்கு உடனடியாக தகவல் சொல்லும் விதமாக புதிய தொழில்நுட்பத்தை நாசா உருவாக்கி வருகிறது. பொதுவாக விண்வெளியில் புயல் உருவானால், செயற்கைகோள்களிலிருந்து சிக்னல்கள் அனுப்பப்படுவது தடைபடும். தற்போது AI உதவியுடன் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று கூறப்படுகிறது.

top videos
    First published:

    Tags: NASA