முகப்பு /செய்தி /உலகம் / செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி இருக்கும்…? மனிதர்களை அனுப்பி சோதனையை செய்யும் பணியில் நாசா தீவிரம்..!

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி இருக்கும்…? மனிதர்களை அனுப்பி சோதனையை செய்யும் பணியில் நாசா தீவிரம்..!

காட்சி படம்

காட்சி படம்

விண்வெளி ஆராய்ச்சியாளர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி நாசா சோதனை மேற்கொள்ளவுள்ளது.

  • Last Updated :
  • international, IndiaAmerica America

அறிவியல் வளர்ச்சியால் மனிதக் குலத்தின் நகர்வு மிக அபாரம். அந்த வரிசையில் விண்வெளி ஆராய்ச்சியிலும் மனிதர்கள் எத்தனையோ சாதனைகளைப் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா.

ஆர்டிமெஸ் என்ற பெயரில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. நான்கு விண்வெளி வீரர்கள் ஆர்டிமெஸ் விண்கலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல இருக்கிறார்கள். செவ்வாய் கிரகத்திற்கு அந்த நான்கு ஆராய்ச்சியாளர்கள் 365 நாட்கள் தங்கியிருக்கிறார். செவ்வாய் கிரகத்திற்கு தங்கி அவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஆயத்த பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செவ்வாய் கிரக பணயத்திற்கு வீரர்களைத் தயார் செய்யும் பணியை நாசா தொடங்கியுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் இருக்கும் சூழ்நிலையைப் போலவே ஒரு வாழ்விடத்தை உருவாக்கியுள்ளது நாசா. செவ்வாய் கிரகத்தில் இருப்பதைப் போன்ற சிவப்பு நிற மண்ணால் சூழ்ந்த 1700 சதுர அடி பரப்பை மார்ஸ் டூன் ஆல்பா எனப் பெயரிடப்பட்டுள்ள திரையால் மூடப்பட்டு அந்த வாழ்விடம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டிற்குள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதைப் போலவே புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் தங்குவதற்கான அறை, மருத்துவ அறை, ஓய்வெடுக்கும் அறை, உடற்பயிற்சிக் கூடம் என அத்தனை வசதிகளும் இருக்கிறது. அந்த வீட்டில் நான்கு பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களின் உடல் மற்றும் மன நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விபரங்கள் துல்லியமாகச் சேகரிக்கப்பட உள்ளது. அப்படிக் கிடைக்கும் விபரங்களைக் கொண்டு செவ்வாய் கிரகத்தில் வீரர்கள் தங்கப் போகும் ஒரு ஆண்டில் என்ன மாதிரியான உணவுப் பொருட்கள் அனுப்புவது, எது போன்ற மருத்துவ பிரச்னைகளை வீரர்கள் எதிர்கொள்வார்கள், அதைச் சமாளிப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்துத் திட்டமிட நாசா விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

Also Read : ஜப்பான் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் திடீர் குண்டுவெடிப்பு.. நல்வாய்ப்பாய் உயிர் தப்பிய பிரதமர் கிஷிடா!

top videos

    அந்த வீட்டில் இன்னும் சில நாட்களில் மனிதர்கள் தங்கி சோதனையைத் தொடங்க உள்ளனர். அந்த வீட்டின் அமைப்பு மற்றும் உட்புற விபரங்கள் குறித்த வீடியோவை நாசா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இப்போதைக்கு விஞ்ஞான உலகின் பேசுபொருளாக மாறியுள்ளது இந்த ஆர்டிமெஸ் திட்டம் தான். எந்த விதமான தவறுகளும் நேர்ந்துவிடாமல் ஆர்டிமெஸ் திட்டம் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்பதில் நாசா மிகக் கவனமாக உள்ளது.

    First published:

    Tags: NASA