விண்வெளி ஆராய்ச்சி என்பது எப்போதுமே சுவாரஸ்யங்கள் நிறைந்தது தான். எத்தனை முறை ஆராய்ச்சி செய்தாலும் ஆச்சரியங்களுக்குக் குறைவு இல்லை. நிலவில் ஏகப்பட்ட ஆராய்ச்சிகளை உலகின் பல்வேறு நாடுகளும் செய்துள்ளன. இன்னும் செய்து கொண்டு தான் இருக்கின்றன. 1969 ஆம் ஆண்டு அமெரிக்கா முதன் முதலில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி ஆராய்ச்சி செய்தது. தற்போது மீண்டும் ஆர்ட்டிமிஸ் திட்டம் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உள்ளது நாசா. அதோடு, செவ்வாய்க் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
சூரியக் குடும்பத்தில் இருக்கும் பிற கோள்களை விடச் செவ்வாய்க் கிரகம் தான் மனிதன் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கலாம் என்றும் அதனால் மனித குடியேற்றம் அடுத்து செவ்வாய்க் கிரகத்தில் தான் அமையும் என்பது விஞ்ஞானிகள் வாதமாக உள்ளது. அதேபோல் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். மேலும் செவ்வாய்க் கிரகத்தைப் பொறுத்தவரை அதன் மொத்த அளவு பூமியில் பாதி என்பது கவனிக்கத்தக்கது.
பின்பு இந்த செவ்வாய்க் கிரகம் சூரியனைச் சுற்றி வர அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பூமியின் கணக்குப் படி செவ்வாய்க் கிரகத்தில் ஒரு வருடம் என்பது 687 நாட்களாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுதவிர செவ்வாய்க் கிரகத்தில் நீர் இருந்ததற்கான தடங்கள் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் இருக்கிறதா? உயிரினங்கள் இருந்தனவா எனப் பல்வேறு ஆய்வுகள் நடக்கிறது.
செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிக்காக நமது இந்தியா, மங்கள்யான் திட்டத்தைச் செயல்படுத்தியது. ஆனால் அந்த திட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை. இப்போது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. வரும் ஜூன் மாதம் நான்கு பேர் செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக அவர்களுக்குத் தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
Also Read : டொனால்டு ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு.. விரைவில் கைதாகிறாரா?
இதற்காக பூமியில் செவ்வாய்க் கிரகம் போன்ற சூழலை உருவாக்கி அங்கு மனிதர்கள் எப்படி நடமாட வேண்டும்? பாதுகாப்பாக இருப்பது எப்படி? அவர்கள் சமைப்பது எப்படி? உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மனிதர்கள் செல்லும் விண்கலத்தில் சமையலறை, உடற்பயிற்சிக் கூடம், மருத்துவ சேவைகளுக்கான அறை, மனமகிழ்ச்சி பெறும் அறை மற்றும் வீரர்கள் வசிப்பதற்கான அறைகள் என அனைத்தும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. நாசாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் செவ்வாய்க் கிரகம் தொடர்பான மேலும் பல தகவல்கள் கிடைக்கப்பெறும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.