ஒரு நாட்டின வளா்ச்சி என்பதில் விண்வெளி சாா்ந்த கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் முக்கிய இடம்பிடிக்கின்றன. அந்த வகையில் எப்படியேனும் நிலவில் மனிதா்களை குடியமா்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் பயணித்துக்கொண்டிருக்கிறது நாசா.
அதன் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களுக்கான உடையை உயா் தொழில்நுட்பத்துடன் மாற்றி வடிவமைத்துள்ளது. எதிர்காலத்தில் சந்திரனுக்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கு நேர்த்தியான மற்றும் முன்பை விட flexible-லான உடையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பழைய உடை போன்றல்லாமல், கை மற்றும் கால்களை இயல்பாக அசைக்க முடியும்.
அன்மையில் இந்த புதிய மாதிரியை வெளியிட்ட நாசா அடுத்த சில வருடங்களுக்கு இந்த உடை மாதிாியை சோதனைக்கு உட்படுத்தி பிறகு விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் என்று தொிவித்துள்ளது. நாசா இந்த உடைகளை உருவாக்க, டெக்சாஸை தலைமையாக கொண்ட நிறுவனத்திற்கு 228.5 மில்லியன் அமெரிக்க டாலர்களில் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதையும் படிக்க : மார்ச் 28ம் தேதி வானில் நடக்கும் அதிசய நிகழ்வு.. இந்த 5 கிரகங்களை ஒன்றாக பார்க்கலாம்!
"Axiom Extravehicular Mobility Unit" அல்லது சுருக்கமாக AxEMU என முத்திரை பதியப்பட்ட புதிய உடைகள், பழைய விண்வெளி வீரர்களுக்கான உடைகளைவிட, பலமாறுபடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது பழைய உடையை ஒப்பிடும் போது கூடுதல் சவுகாியமாக இருக்கும் வகைளில் வடிவமைக்கப்பட்டுள்ளது
பல பாதுகாப்பு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ள இந்த உடையில் பாதுகாப்பான ஹெல்மெட், வெளிச்சத்திற்காக விளக்குகள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாசாவின் இந்த புதிய உடை நிலவில் பெண்களும் பயணிக்க எதுவாகவும், முன்பை விட அதிகமான மக்கள் நிலவின் அறிவியலை ஆராய வசதியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தண்ணீருக்குள் பாயும்.. அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா..
நிலவில் மனிதா்கள் குடியேற்றம் என்ற பயணத்திற்கு முன்பு விண்வெளி அமைப்பு போன்ற இடத்தில் இந்த மாதிாி உடை சோதிக்கப்பட உள்ளதாக நாசா தொிவித்துள்ளது. உடையை பொறுத்தவரையில் எட்டு மணி நேரம் தொடர்ந்து அணிய எதுவாகவும். 90 சதவீதம் மக்கள் பயன்படுத்த எதுவாகவும் வடிவமைக்கபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
1972-ல் வரலாற்று சிறப்புமிக்க அப்பல்லோ விண்வெளி பயணத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனுக்கு மனிதர்களைத் அனுப்புவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் நாசாவின் முயற்சிக்கு இந்த விண்வெளி உடை கூடுதல் உந்துதலாக இருக்கும் என்றே எதிா்பாா்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.