முகப்பு /செய்தி /உலகம் / குதிரை சவாரியின்போது விபத்து.. 23 வயதான பிரபஞ்ச அழகி இறுதிப் போட்டியாளர் பரிதாப மரணம்!

குதிரை சவாரியின்போது விபத்து.. 23 வயதான பிரபஞ்ச அழகி இறுதிப் போட்டியாளர் பரிதாப மரணம்!

உயிரிழந்த இளம் அழகி சியன்னா வெயிர்

உயிரிழந்த இளம் அழகி சியன்னா வெயிர்

குதிரை சவாரியின் போது ஏற்பட்ட விபத்து காரணமா இளம் மாடல் அழகியான சியன்னா வெயிர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • Last Updated :
  • inter, IndiaCanberraCanberra

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இளம் மாடல் சியன்னா வெயிர். ஆஸ்திரேலியாவின் முன்னணி மாடலான இவர் 2022 பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்று, இதில் இறுதி சுற்று போட்டியாளராக(Finalist) முன்னேறியவர்.

இவர் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள விண்ட்சர் போலோ மைதானத்தில் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தார். அப்போது குதிரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வெஸ்ட் மீட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலத்த காயங்கள் காரணமாக, சியன்னா தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார். தொடர்ந்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படதாதால் சுமார் 1 மாதம் வென்டிலேட்டரில் இருந்தார்.

ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று வென்டிலேட்டர் அகற்றப்பட்டது. இதனால் மே 4 அன்று சியன்னாவின் உயிர் பிரிந்தது. சிட்னி பல்கலைக்கழகத்தில் இலக்கியம் மற்றும் உளவியல் ஆகிய பாடங்களில் இரட்டை பட்டப்படிப்பை முடித்தவர் சியன்னா. இவர் பிரிட்டனுக்கு சென்று குடியேறி பேஷன் தொழிலில் ஈடுபட திட்டமிட்டிருந்தார்.

இதையும் படிங்க: பிரிட்டன் மன்னர் முடிசூட்டு விழாவை புறக்கணித்த மருமகள் மேகன் மார்கல்.. காரணம் இது தான்

இவருக்கு குதிரை சாவரி என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. தனது 3 வயதில் இருந்தே குதிரை சவாரியில் ஈடுபடும் இவர், இது இல்லாத வாழ்க்கையை நினைத்தே பார்க்க முடியாது என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். கடைசியில், அதுவே சியன்னாவின் வாழ்க்கையை பறிக்கும் அவலமாக மாறிவிட்டது. சியன்னாவின் மறைவுக்கு அவரது உறவினர், நண்பர்கள், சக மாடலிங் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Australia, Horse riding, Miss Universe