முகப்பு /செய்தி /உலகம் / அமெரிக்காவில் நடந்த பிரமாண்ட ஃபேஷன் ஷோ.. புடவையில் வந்த பிரபல மாடல்

அமெரிக்காவில் நடந்த பிரமாண்ட ஃபேஷன் ஷோ.. புடவையில் வந்த பிரபல மாடல்

மெட் காலா

மெட் காலா

Met Gala 2023 : இந்த ஆண்டிற்கான மெட் காலா நிகழ்ச்சி மறைந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்ட்-ஐ மரியாதை செலுத்தும் வகையில் அமைந்தது.

  • Last Updated :
  • internationa, IndiaAmerica America America

அமெரிக்காவில் உலகின் அனைத்து துறை சார்ந்த பிரபலங்களுக்கும் கலந்துகொள்ளும் மிக பெரிய பேஷன் நிகழ்ச்சியான மெட் காலா வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த மெட் காலா நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்தும் ஆடை வடிவமைப்பாளர்கள், ஃபேஷன் பிரபலங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்றனர்.

பிரபல நடிகையும் பாடகியுமான ரிஹானா, நவோமி காம்பெல், கிம் கர்தாசியன் உள்ளிட்ட மாடல் அழகிகளும் இந்த நிகழ்ச்சியில் அனைவரையும் கவரும் உடை அலங்காரங்களுடன் பங்கேற்றனர். இந்த ஆண்டு மறைந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்ட்-ஐ நினைவுபடுத்தும் வகையில் அவரின் படைப்புகள் இந்த நிகழ்ச்சியில் ரபலங்களால் மறுஉருவாக்கம் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ரெட் கார்பெட்டில் பிரபலங்கள் அணியும் ஆடைகள் தான் மெட் காலாவின் முக்கிய சிறப்பம்சமாக அமையும். அந்த வகையில், மிக நீண்ட உடைகளையும், கச்சிதமான உடைகளையும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் அணிந்து கலக்கினர். பிரபல பாடகியான ரிடா ஓரா கருப்பு நிற உடையில் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து, பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஸ்டைலாக நடந்து சென்றார்.

பூனை வடிவில் உடையணிந்து வந்த ஜாரட் லிடோ பலரின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபல மாடல் நவோமி காம்பெல், புடவையில் வலம் வந்தார். இந்தியப் பிரபலங்களான பிரியங்கா சோப்ரா மற்றும் ஆலியா பட் உள்ளிட்டோர்களும் மெட் காலா நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

First published:

Tags: America, Fashion