முகப்பு /செய்தி /உலகம் / 16 வயது சிறுமியின் பிறந்த நாள் விழாவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி 28 பேர் படுகாயம்...

16 வயது சிறுமியின் பிறந்த நாள் விழாவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி 28 பேர் படுகாயம்...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

USA Gun FIre | துப்பாக்கிச்சூட்டில் பலியான பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • interna, Indiausausausausa

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

அலபாமா மாகாணத்தின் டாட்வில்லி பகுதியில், 16 வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம், அப்பகுதியில் உள்ள நடன அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது, அங்கிருந்தவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனை அடுத்து, துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படிங்க: சூடானில் வெடித்துள்ள உள்நாட்டுக் கலவரம்: 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

top videos

    இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 28 பேர் ரஸ்ஸல் மருத்துவமனையிலும், கிழக்கு அலபாமா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உள்ளூர் கால்பந்து வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். எனினும், தாக்குதல் நடத்தியவர் குறித்த விவரங்களை காவல் துறையினர் வெளியிடவில்லை.

    First published:

    Tags: Gun fire, USA