முகப்பு /செய்தி /உலகம் / அவசர பணத்தேவை... பெண்களுக்கான செஸ் போட்டியில் விளையாட புர்கா அணிந்து ஆள்மாறாட்டம் செய்த வாலிபர்!

அவசர பணத்தேவை... பெண்களுக்கான செஸ் போட்டியில் விளையாட புர்கா அணிந்து ஆள்மாறாட்டம் செய்த வாலிபர்!

ஹிஜாப் அணிந்து பெண் போல நாடகமாடிய ஆண் வீரர்

ஹிஜாப் அணிந்து பெண் போல நாடகமாடிய ஆண் வீரர்

பெண்களுக்கான செஸ் தொடரில் வாலிபர் ஒருவர் பெண் போல ஆள்மாறாட்டம் செய்து விளையாடி கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

  • Last Updated :
  • inter, IndiaNairobiNairobi

தேர்வுகளுக்கு ஆள்நடமாட்டம் செய்து பாஸ் செய்யும் நபர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கு ஒரு ஆண் விளையாட்டு வீரர், பெண் போல ஆள்மாறாட்டம் செய்து கையும் களவுமாக சிக்கியுள்ளார். இந்த சம்பவம் ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் நடைபெற்றுள்ளது.

கென்யாவில் மாபெரும் செஸ் போட்டி பெண்களுக்கு நடைபெற்றது. இதில் 22 நாடுகளை சேர்ந்த சுமார் 400 வீரர்கள் பங்கேற்றனர். இந்க தொடரில் கென்ய நாட்டின் மாணவர் ஒருவர் பெண் போல மாறுவேடம் அணிந்து பங்கேற்று பின்னர் போட்டி அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார். இந்த நபரின் பெயர் ஸ்டான்லி ஓம்னோடி. 25 வயதான ஸ்டான்லிக்கு அவசரமான பணத் தேவை இருந்துள்ளது.

எனவே, நாம் இந்த போட்டியில் பங்கேற்று பரிசு தொகையை வெல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளார். இதற்காக உடல் மற்றும் முகம் முழுவதும் மறையும்படி புர்கா அணிந்து பெண் போல தன்னை அடையாளம் மாற்றிக்கொண்டார்.

தனது பெயரை மிலிசென்ட் அவோர் என்று மாற்றி பதிவு செய்த அவர், போட்டியில் பங்கேற்று விளையாடத் தொடங்கினார். எளிதாக வெற்றி பெற்று நான்காவது சுற்றுவரை முன்னேறினார். ஆனால், அவரது வெற்றியானது போட்டி நடத்தும் நிர்வாகத்தினருக்கு சந்தேகத்தை கிளப்பியது. எனவே, அவரை தனி அறைக்கு அளித்து சென்று அடையாளத்தை நிரூபிக்குமாறு கேட்டனர். அப்போது தான் தனது உண்மை அடையாளத்தை அவர் வெளிப்படுத்தி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையும் படிங்க: 500 நாட்கள் குகைக்குள் தனிமை வாழ்க்கை.. ஸ்பெயின் பெண்மணி புதிய சாதனை..!

top videos

    நிதித் தேவைக்காகத் தான் இதை நான் செய்தேன். இதற்கான எதிர்வினைகளை நான் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றுள்ளார். அவரை போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றிய நிர்வாகத்தினர், தக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

    First published:

    Tags: Chess, Hijab, Nigeria