சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது இரண்டு சிங்கங்கள் கூண்டைவிட்டு தப்பித்து வெளியே நடமாடியதால் பார்வையாளர்கள் அச்சமடைந்து ஓட்டம்பிடித்தனர்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சர்க்கஸ் ஒன்றில் பயிற்சியாளர்கள் இரண்டு சிங்கங்களுடன் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கூண்டில் இருந்து தப்பிய சிங்கங்கள் இரும்பு கூண்டு அருகே நடமாடின. இதனால் அச்சமடைந்த மக்கள் தங்கள் குழந்தைகளை கையில்பிடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.
People run for their lives as two lions escape circus show in China
chinese buffet is best buffet🤓#streetfood #streetfights #crazyclips #dummyclips #Schoolfight #fightingvideos #knockedout #fighting #Lion #Circus #RIPMoonbin pic.twitter.com/o7977hxnKk
— dummy clips (@dummyclips_) April 20, 2023
நல் வாய்ப்பாக சிங்கங்கள் மீண்டும் கூண்டிலேயே அடைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் சிங்கங்கள் யாரையும் தாக்கவில்லை. மேலும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் சர்க்கஸ் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.