உலக அளவில் கட்டமைப்பு தொடர்பான சாதனைகளை செய்வதென்றால் வளைகுடா நாடுகளுக்கு அவ்வளவு விருப்பம். குறிப்பாக உலக சுற்றுலாவாசிகளை ஈர்ப்பதற்காக இது போன்ற வித்தியாசமான கட்டுமானங்களை கட்டுகிறார்கள். அந்த வரிசையில் குவைத் நாடும் இணைய உள்ளது.
உலக கரன்சிகளிலியே அதிக மதிப்பு குவைத் தினாருக்குத் தான். ஏனென்றால் அதிக எண்ணெய் வளம் கொண்ட பணக்கார நாடுகளில் குவைத்தும் ஒன்று. அதனால் தான் குவைத் அரசு சுற்றுலாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஏற்கனவே துபாய், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் உலகச் சுற்றுலாவிற்கு முன்னுரிமை அளிக்கின்றன. அதற்காக தங்கள் நாடுகளில் பிரமிக்கவைக்கும் கட்டுமானங்களை அந்நாட்டு அரசுகள் ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் குவைத்தில் அமைய இருக்கிறது உலக அடுத்த உலக அதிசயம். இதுவரை உலகின் மிக உயரமான கட்டிமாக திகழ்வது துபாயில் இருக்கும் புர்ஜ் கலிபா தான். அதன உயரம் 828 மீட்டர். (அதாவது 2,716 அடி). அதை மிஞ்சும் வகையில் புதிய கோபுரம் கட்ட குவைத் அரசு திட்டமிட்டுள்ளது.
புர்ஜ் முபாரக் அல் கபீர் எனப் பெயரிடப்பட இருக்கும் இந்த கோபுரம் ஒரு கிலோமீட்டர் உயரம் இருக்குமாம். இதற்காக நம் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 66 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கவும் தயாராக இருக்கிறதாம் குவைத் அரசு. ஒரு கிலோமீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடம் குவைத்தின் சில்க் சிட்டியின் முக்கிய ஈர்ப்பாக அமையும் என குவைத் அரசு கூறியுள்ளது.
இந்த கோபுரம் குவைத் நகரின் சுபியா பகுதியில் அமைந்துள்ள "சிட்டி ஆஃப் சில்க்" எனப்படும் மதீனத் அல்-ஹரீர் பகுதியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என்கிறது இந்த கோபுரத்தின் கட்டுமான நிறுவனமான தம்டீன் குழுமம். இந்த கோபுரத்தால் 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பகுதிகள் வளர்ச்சியடையும் என நம்புகிறது குவைத் அரசு.
கோபுரத்தைச் சுற்றி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கிற்கென பெரிய பூங்காங்கள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன. இந்த கோபுரத்தில் 234 மாடிகள் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் சுமார் 7ஆயிரம் பேர் வசிக்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 43ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள்.
புர்ஜ் முபாரக் அல்-கபீர் கட்டிடத்தை ஸ்பெயினை சேர்ந்த கட்டிடக் கலைஞரான சாண்டியாகோ கலட்ராவாவா வடிவமைத்து இருக்கிறார். இதனை கட்டி முடிக்க சுமார் 25 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஒரு பாரம்பரிய இஸ்லாமிய மினாராவின் வடிவமைப்பில் இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம். இது ஒரு மெல்லிய கத்தி போன்ற வடிவம் மேல் நோக்கித் செல்வதைபோல் வடிவமைத்து உள்ளார்கள்.
இதையும் வாசிக்க: ஸ்மார்ட் போன்கள் இல்லாத உலகம் சாத்தியமா...? இனி வரும் காலம் எப்படி இருக்கும்?... பிரமிக்க வைக்கும் தகவல்கள்..!
இந்த வான் உயர்ந்த கட்டிடத்தில் உணவகங்கள், விடுதிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள், கண்காணிப்பு தளங்கள், சில்லறை மற்றும் வணிக வளாகங்கள் என பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கும். இந்த கோபுரம் குவைத்தின் சின்னமாக இருக்கும் என அந்நாட்டு அரசு நம்புகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kuwait