மர்மங்களுக்கு பெயர் பெற்ற வடகொரியாவில் அந்நாட்டு அதிபர் கிம்மின் மகள் தனது தந்தையோடு சேர்ந்து ஏவுகணை சோதனையை பார்வையிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைகளின் நாயகன் கிம் ஜோங் உன். அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த நாடே இரும்புத் திரை நாடு தான். அங்கு உண்மையில் என்னதான் நடக்கிறது என்பது உலக நாடுகளுக்குத் தெரியாது.
கிட்டத்தட்ட கொடுங்கோல் ஆட்சி தான் நடத்தி வருகிறார் கிம் என உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. தென் சீனக்கடல் பகுதியில் அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடிக்கடி கிம் ஜோங் உன் சோதனை செய்து வருகிறார்.
இதனால், அமெரிக்கா கிம் மீது கடும் கோபத்தில் உள்ளது. தென்கொரியாவையும் அடிக்கடி சீண்டி வருகிறார் கிம் ஜோங் உன். இந்நிலையில், ஏவுகணை சோதனையை தனது தந்தையுடன் சென்று வேடிக்கை பார்த்துள்ளார் அவரது மகள். அந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் இவர் அவரது மகளா? அவரின் வயது என்ன இது போன்ற எந்த விபரங்களும் அதிகாரப்பூர்வமாக தெரியாது. கடந்த சில மாதங்களாகத்தான் கிம்மின் மகள் பொது வெளியில் தோன்றி வருகிறார். தென்கொரியாவின் உளவுப்பத்திரிகை அவரது மகள் தொடர்பான சில விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கிம்-மின் மகள் பெயர் ஜூ ஏ என்பதும், அவருக்கு 10 வயது என்பதும் தகவல் தெரியவந்துள்ளது.
வடகொரியாவில் மற்ற குழந்தைகள் பள்ளியில் அமர்ந்து பாடம் படித்து வரும் நிலையில் கிம் ஜோங் உன்னின் மகள் ஏவுகணை சோதனையை பார்வையிடும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளை உடை அணிந்து கொண்டு தனது தந்தையின் கையை பிடித்துக் கொண்டு அந்த சிறுமி நடந்து வருவது போன்ற புகைப்படம் வெளியான போதே பலரின் புருவங்கள் உயர்ந்தன. உலக நாடுகளுக்கு மட்டுமல்ல, வடகொரிய மக்களுக்கே இது யார் என்ற கேள்வி எழுந்தது. அதைத் தொடர்ந்து தான் அந்த சிறுமி கிம்மின் மகள் என்பதே வெளி உலகிற்கு தெரியவந்தது. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கட்டாயம் வாசிக்க: சூடானில் உள்நாட்டு போர் - இந்தியர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழப்பு
இந்நிலையில், ஆபத்தான ஆயுதங்கள் அருகில் இந்த சிறுமி மிடுக்குடன் நிற்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சில மாதங்களுக்கு முன்பு கிம்மின் சகோதரி என ஒருவரின் புகைப்படம் வெளியானது. இப்போது மகளின் புகைப்படம். தனது அடுத்த வாரிசாக ஜூ ஏவை வளர்க்கிறார் என்கிறார்கள் சிலர். ஆயிரக்கணக்கான வீரர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மிடுக்காக அணிவகுத்து செல்லும் காட்சியை ஆர்வமாக பார்வையிடும் சிறுமி குறித்த விபரங்கள் மர்மங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: North korea