முகப்பு /செய்தி /உலகம் / ஆபாசமாக புகைப்படம் எடுத்தால் கடும் தண்டனை... ஜப்பானில் வருகிறது புதிய சட்டம்..!

ஆபாசமாக புகைப்படம் எடுத்தால் கடும் தண்டனை... ஜப்பானில் வருகிறது புதிய சட்டம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு சீர்திருத்த்தை ஜப்பான் மேற்கொண்டு வருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu |

பாலியல் வன்முறை, பாலியல் வல்லுறவுக்கு எதிரான நடவடிக்கையை ஜப்பான் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. திருமணத்துக்கான வயதை அதிகரிப்பது, பாலியல் வல்லுறவு பற்றிய வரையறையை மறுசீரமைப்பது, தண்டனையை கடுமையாக்குவது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை அந்நாடு மேற்கொண்டு வருகிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் திருமணத்துக்கான உரிய வயது ஜப்பானில் மிகக் குறைவாக உள்ளது. ஜி7 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகவும். 2019ல் எண்ணற்ற பாலியல் குற்றங்களில், குற்றங்களை நிரூபிக்க முடியாததைக்  கண்டித்து, அங்கு மிகப் பெரிய அதிருப்தி குரல் உருவானது.

பாலியல் குற்றங்களுக்கு எதிரான ஒரு சீர்திருத்த்தை அந்நாடு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மற்றவர்களின் முறையான ஒப்புதலின்றி பாலியல் மோகத்துடன் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்க தடை விதிக்கும் மசோதாவை ஜப்பான் நாடாளுமன்ற கொண்டு வர திட்டமிட்டுள்ளது. பாலியல் மோகத்தை தூண்டும்  புகைப்படங்களால் எண்ணற்ற குழந்தைகளும், பெண் விளையாட்டு வீரர்களும், விமானப் பணி பெண்களும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

பாலியல் இச்சையைத் தூண்டக்கூடிய வகையில் புகைப்படம் எடுப்பதை இச்சட்டம் தடை செய்கிறது. ஒரு பெண் உடை மாற்றும்போதோ அல்லது பாலுறவில் இருக்கும்போதோ அவரை ரகசியமாக படம்பிடிப்பது ஆகியவற்றை குற்றமாக்குகிறது.

இதையும் வாசிக்கஉலகில் ஒரு முஸ்லீம் கூட இல்லாத ஒரே நாடு இதுதான்... ஏன் தெரியுமா?

அனுமதியின்றி, ஒருவரின் பிறப்புறுப்பை புகைப்படம் எடுப்பது,  அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவது ஆகியவற்றை இது தடை செய்கிறது. மேலும், ஒரு புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபசமாக மாற்றுவதும் குற்றமாக்க பரிந்துரைக்கிறது. குறிப்பாக, எந்தவித நியாய காரணமின்றி, குழந்தைகளை பாலியல் காரணங்களுக்காக படம் பிடிப்பதை இச்சட்டம் முற்றிலும் தடை செய்கிறது.

top videos

    குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 3 மில்லியன் ஜப்பானிய யென் (£17,500; $22,000) வரை அபராதம் விதிக்கப்படும். இந்த ஆண்டு ஜூன் மாதம் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: Japan