முகப்பு /செய்தி /உலகம் / இஸ்ரேல் தொடர் போராட்டம்.. பிரதமர் அதிரடி அறிவிப்பு!

இஸ்ரேல் தொடர் போராட்டம்.. பிரதமர் அதிரடி அறிவிப்பு!

இஸ்ரேல்

இஸ்ரேல்

Israel Prime minister | நாடாளுமன்றம் அருகே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தியதால் பிரதமர் பெஞ்சமினுக்கு நெருக்கடி அதிகரித்தது.

  • Last Updated :
  • internat, Indiaisraelisrael

இஸ்ரேலில் நடந்த பிரம்மாண்ட போராட்டத்தின் எதிரொலியாக, நீதித்துறை சீர்திருத்த நடவடிக்கைகளை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ அறிவித்துள்ளார்.

இஸ்ரேலில் நீதித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ முடிவுசெய்தார். அதன்படி, உச்சநீதிமன்றத்திற்கான அதிகாரம் குறைக்கப்படும் எனவும், அனைத்து நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் நியமனத்தில் அரசு முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், நீதித்துறையில் அரசு அதிகாரம் செலுத்தக்கூடும் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

நாட்டின் ஜனநாயக மாண்புகளை பிரதமர் குலைப்பதாகக் குற்றம்சாட்டி, மக்களும் போராட்டத்தில் குதித்தனர். ஜனவரி மாதம் தொடங்கிய போராட்டம், சில வாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று பணி முடக்கப் போராட்டம் நடைபெற்றது.

top videos

    மேலும், நாடாளுமன்றம் அருகே 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். இதனால், அதிபர் ஐசக் ஹர்சாக் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் பிரதமர் பெஞ்சமினுக்கு நெருக்கடி அதிகரித்தது. இதையடுத்து, நீதித்துறை சீரமைப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதை ஒத்திவைப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ தெரிவித்துள்ளார்.

    First published:

    Tags: Israel, Protest