முகப்பு /செய்தி /உலகம் / இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 30 பலி... பாலிஸ்தீன அரசு புகார்

இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 30 பலி... பாலிஸ்தீன அரசு புகார்

இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • interna, Indiapalestine

இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன் அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக காஸா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசி வருகிறது. குறிப்பாக, காஸாவின் தெற்குப் பகுதியில் உள்ள கட்டடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.

கடந்த செவ்வாய் கிழமை முதல் இரவு பகலாக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதலில், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தலைவர்கள் இருவர் உட்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 90-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

top videos

    தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 10 பேர் சாதாரண மக்கள் என்றும், இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது எனவும் ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. தனது தரப்பின் தவறுகளில் இருந்து இஸ்ரேல் தப்பிக்க முயல்வதாக பாலஸ்தீன தலைவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

    First published:

    Tags: Israel