முகப்பு /செய்தி /உலகம் / 11 மணி நீதிமன்றத்தில் காத்திருப்பு... அனைத்து வழக்குகளில் இருந்து இம்ரான் கானுக்கு ஜாமீன்...

11 மணி நீதிமன்றத்தில் காத்திருப்பு... அனைத்து வழக்குகளில் இருந்து இம்ரான் கானுக்கு ஜாமீன்...

நீதிமன்றத்தில் ஆஜராகிய இம்ரான் கான்

நீதிமன்றத்தில் ஆஜராகிய இம்ரான் கான்

Imran Khan Arrest | பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இம்ரான்கான் கைது சட்டவிரோதம் என கூறியதோடு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

  • Last Updated :
  • intern, Indiapakistanpakistanpakistan

இம்ரான் கானுக்கு எதிரான அனைத்து வழக்குகளில் இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 11 மணி நேரம் நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த இம்ரான் கான் லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று முன் தினம் இஸ்லமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றிற்கு ஆஜரான இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இம்ரான் கான் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட ஆங்காங்கே வன்முறை வெடித்தது. அரசு சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் கைது தொடர்பாக இம்ரான்கான் சார்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இம்ரான்கான் கைது சட்டவிரோதம் என கூறியதோடு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி நேற்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆன இம்ரான்கானுக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: கர்நாடகா தேர்தல் குறித்த முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

ஆனாலும், ஜாமீனின் எழுத்து பூர்வ உத்தரவுக்கு முன்பாக அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஜாமீனின் எழுத்து பூர்வ உத்தரவு கிடைக்கும் வரை இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்திலேயே காத்திருந்தார். சுமார் 11 மணி நேரம் நீதிமன்றத்தில் காத்திருந்த இம்ரான் கான் அதன்பிறகு லாகூர் புறப்பட்டு சென்றார்.

First published:

Tags: Imran khan, Pakistan Army