நாய் என்றதும் நினைவுக்கு வருவது அதன் நன்றியுணர்வு. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் தன்னை வளர்த்தவர்களை நாய் நினைவில் வைத்திருக்கும். தன்னை வளர்த்தவர் இறந்தால் நாய் கண்ணீர் விடும் செய்திகளை நாம் பார்த்திருப்போம். இதே போல சம்பவம் ஒன்று அயர்லாந்தில் நடந்திருக்கிறது.
அயர்லாந்தில் நாட்டில் நாய் ஒன்று 64 கிலோ மீட்டர் தூரத்தை 27 நாட்களில் கடந்து தனது பழைய ஓனரின் பகுதிக்கு சென்றிருக்கும் சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. அயர்லாந்து நாட்டின் டோபர்மெர் என்ற நகரைச் சேர்ந்த நிகேல் என்ற புகைப்படக் கலைஞர் நாய் ஒன்றை அருகிலிருக்கும் கடையிலிருந்து வாங்கி கூப்பர் என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார்.
அவரது வீட்டில் ஏற்கனவே மோலி என்ற நாய் இருந்த நிலையில், இரண்டு நாய்களும் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் என நிகேல் நினைத்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1 அன்று இரண்டு நாய்களையும் காரில் வெளியில் அழைத்து சென்றிருக்கிறார். கார் கதவைத் திறந்ததும் கூப்பர் வேகமாக ஓடியிருக்கிறது. நிகேலால் விரட்டி சென்று கூப்பரை பிடிக்க முடியவில்லை.
இதையும் படிக்க | தமிழகத்தை மீண்டும் மிரட்டப்போகும் மிக கனமழை : வானிலை மையம் கொடுத்த ஹை அலெர்ட்!
இதனையடுத்து தனது நாய் கூப்பரை காணவில்லை என அப்பகுதியில் நிகேல் போஸ்டர் ஒட்டியிருக்கிறார். ஆனால் கூப்பர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடந்த 27 நாட்களுக்கு பிறகு கூப்பர் டோபர்மோர் என்ற பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனை கேட்ட நிகேல் அதிர்ச்சியடைந்திருக்கிறார். காரணம் இதற்கு முன் கூப்பரை வளர்த்த ஓனரின் வீடு அந்தப் பகுதியில் இருந்திருக்கிறது.
காடு, மலைகள், கரடு முரடான சாலைகள், டிராஃபிக் ஆகியவற்றைக் கடந்து உணவு, தண்ணீர் இல்லாமல் 64 கிலோமீட்டரை 27 நாட்களில் கடந்துவந்திருக்கிறது. சோர்விலிருந்து மெல்ல மீண்டு வரும் கூப்பர் தற்போது தன்னிடம் நலமாக இருப்பதாக நிகேல் தெரிவித்திருக்கிறார். இது சினிமா கதையைப் போல இருப்பதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். கூப்பரின் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என இணையவாசிகள் நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog