முகப்பு /செய்தி /உலகம் / ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்கள் மீது தாக்குதல்; தாக்கப்பட்ட பெண்கள் கைது - வைரலாகும் வீடியோ

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்கள் மீது தாக்குதல்; தாக்கப்பட்ட பெண்கள் கைது - வைரலாகும் வீடியோ

ஈரான் தாக்குதல்

ஈரான் தாக்குதல்

ஈரானில் ஹிஜாப் அணியாத இரண்டு பெண்களை ஒருவர் தயிர் டப்பாவைக் கொண்டு தாக்கியுள்ளார். மேலும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

  • Last Updated :
  • interna, Indiairan

இஸ்லாமிய நாடுகளில் பொதுவாக உடைக் கட்டுப்பாடு கடுமையாக இருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும். இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரானில் பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மற்றும் ஏழு வயதைக் கடந்த சிறுமிகள் தலையை முடியை மூடி இருக்கும் வகையிலான ஹிஜாப்பைக் கட்டாயம் அணியம் வேண்டும் என்பது சட்டமாக இருந்துவருகிறது. இந்தநிலையில், ஈரான் நாட்டில் இரண்டு பெண்கள் ஹிஜாப் அணியாமல் கடைக்கு வருகின்றனர்.

பொருள்கள் வாங்குவதற்காக அங்கு அவர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு நிற்கும் ஆண் அவர்களைக் கண்டு கொள்ளாமல் அவரது பணியைச் செய்துக் கொண்டிருக்கிறார். சற்று நேரம் கழித்து அந்தக் கடைக்கு வரும் நபர் இந்தப் பெண்களைப் பார்த்தவுடன் கடையின் ஓரத்தில் இருந்த தயிர் டப்பாவை எடுத்து இரு பெண்களையும் தாக்குகிறார். இரு பெண்களின் தலையிலும் தயிரைக் கொட்டினார்.

அதனையடுத்து, கடைக்காரர் அந்த நபரை பிடித்து கடையை விட்டு வெளியே தள்ளுகிறார். பொது இடத்தில் வன்முறையில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். மேலும், ஹிஜாப் அணியாமல் வந்து தாக்குதலுக்கு உள்ளான இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிஜாப் அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கடை உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த ஈரான் அதிபர் இப்ராஹீம் ராய்சி, ‘மத விதிமுறைகளின் காரணமாக ஈரானியப் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும். ஹிஜாப் என்பது சட்டப்படியான ஒன்று. அதைக் கடைபிடிப்பது கட்டாயம்’ என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் 22 வயது குர்தீஷ் பெண் ஹிஜாப் அணியாத காரணத்தால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஹிஜாப்புக்கு எதிராக அந்நாட்டில் பெண்கள் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்துவந்தனர்.

top videos
    First published:

    Tags: Iran