முகப்பு /செய்தி /உலகம் / இனி ஸ்மார்ட் கேமரா கண்காணிப்பு... ஹிஜாப் அணியாத பெண்களை பிடிக்க ஈரான் புது திட்டம்

இனி ஸ்மார்ட் கேமரா கண்காணிப்பு... ஹிஜாப் அணியாத பெண்களை பிடிக்க ஈரான் புது திட்டம்

ஈரானில் ஹிஜாப் சட்டம்

ஈரானில் ஹிஜாப் சட்டம்

பொதுவெளியில் ஸ்மார்ட் கேமராக்களை பொருத்தி ஹிஜாப் உடைகளை அணியாத பெண்களை கண்டறியும் நடவடிக்கையை ஈரான் காவல்துறை மேற்கொள்ளவுள்ளது.

  • Last Updated :
  • inter, IndiaTehranTehran

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் கடுமையான முறையில் பின்பற்றப்படுகின்றன. அதன்படி 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அங்கு பெண்கள் இஸ்லாமிய சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது உள்ளிட்டவற்றை கண்காணிக்க நெறிமுறை பிரிவு என்று காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கடுமையான சட்ட விதிகளுக்கு எதிராக அந்நாட்டில் கடந்தாண்டு பெரும் கிளர்ச்சி வெடித்தது. கடந்த செப்டம்பர் மாதம் அந்நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் மாஷா அமினி முறையாக ஹிஜாப் அணியாததாக கூறி, அவரை காவல்துறை கைது செய்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மரணம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஈரானில் இந்த சட்டத்திற்கு எதிராக பெண்கள், கல்லூரி மாணவர்கள், மனித உரிமையாளர்கள உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டங்கள் அந்நாட்டு அரசை ஆட்டம் காணவைத்தது. இந்நிலையில், ஹிஜாப் ஆடை கட்டுப்பாட்டை கறாராக பின்பற்ற ஈரான் அரசு தற்போது தொழில்நுட்ப உதவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொதுவெளியில் ஸ்மார்ட் கேமராக்களை பொருத்தி ஹிஜாப் உடைகளை அணியாத பெண்களை கண்டறியும் நடவடிக்கையை ஈரான் காவல்துறை மேற்கொள்ளவுள்ளது.

இதையும் படிங்க: உலக பொருளாதார வளர்ச்சி... இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்... வெளியான முக்கிய தகவல்..!

அவர்களின் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்கள் எச்சரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமீறல் தொடரும்பட்சத்தில் அடுத்த கட்டமாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் எனவும் காவல்துறை தலைவர் அஹ்மத் ரேசா ராதான் தெரிவித்துள்ளார். நாட்டின் சட்டத்தை மீறி செயல்படும் எந்த ஒரு நபரையும் அரசு பொறுத்துக்கொள்ளாது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: Camera, Hijab, Iran