மேற்காசிய நாடான ஈரான் பாரம்பரிய வரலாற்று பெருமை கொண்ட நாடு. பெர்சியா என அழைக்கப்பட்ட ஈரான் மிகப்பெரிய சாமராஜ்யமாக விளங்கிய நாடு. ஆனால் அண்மைக் காலமாக பல்வேறு அரசியல் குழப்பங்கள் அந்த நாட்டில் நிகழ்ந்து வருகின்றன. தற்போது ஈரானின் அதிகாரமிக்க தலைவராக அயத்தொல்லாஹ் அலி கமெய்னி இருக்கிறார். அந்நாட்டில் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சமீப காலமாக ஈரானில் தூக்கு தண்டனை உள்ளிட்ட மரண தண்டனைகள் விதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக கடந்த பத்து நாட்களில் மட்டும் 42 பேர் தூக்கிடப்பட்டுள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான IRH தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த பத்து நாட்களில் ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒருவர் தூக்கிலிடப்பட்டு வருவதாக அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. இப்படி தூக்கிலிடப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பலுச் பகுதியைச் சேர்ந்த சிறுபான்மையினர் என்கிறது அந்த அமைப்பு. அதே போல் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். இதற்கு சுவீடன் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால் பெரும்பாலான தூக்குத் தண்டனைகள் போதைப் பொருள் வைத்திருந்ததற்காகத்தான் வழங்கப்பட்டுள்ளன. ஈரான் அரசின் மனிதத்தன்மையற்ற இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். ஆனாலும் ஈரான் அரசு தூக்கு தண்டனைகள் வழங்குவதை நிறுத்தவில்லை.
ஈரான் நாட்டில் குற்றச்செயல்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து வருகின்றன. இதுதொடர்பாக அந்த நாட்டில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 194 பேரை தூக்கிலிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகளை தூக்கிலிட்டுள்ளனர். போதைப் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர்களில் பாதிப்பேர் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த ஆண்டில் மட்டும் இந்த நாட்டில் 82 கைதிகளை தூக்கிலிட்டுள்ளனர் என்று ஐ.எச்.ஆர் அமைப்பு கூறியுள்ளது. அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டில் 333 கைதிகளை தூக்கிலிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக என்பதற்காக அல்ல, மாறாக பொது பயத்தை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இது போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன என குற்ம் சாட்டுகிறார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மொகமது ஆம்ரி மொகோண்டம் என்பவர் . இது தொடர்பாக உலக நாடுகள் அமைதி காப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Iran