விதவிதமான முறையில் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை சிலருக்கு ஏற்படுவது உண்டு. அதை செயல்படுத்தும் போது சில நேரங்களில், அது விபரீதத்தில் சென்று விட்டுவிடும். அப்படித்தான், இந்தோனேசியாவில் 37 வயது நபர் தனது பார்ட்னருடன் பாலியல் உறவில் ஈடுபட்டார். அப்போது, ரிவர்ஸ் கவ் கெர்ள் (Reverse Cowgirl) என்ற பொசிஷனில் இவர் தனது பார்ட்னருடன் உறவில் இருந்தார்.
அப்போது அவரது ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்டு உடைந்து போனது போல காயம் ஏற்பட்டுள்ளது. அவரது ஆணுறுப்பின் முனையில் இருந்து ரத்தம் கசிய தொடங்கியது. மேலும், அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. இந்த திடீர் விபத்தால் பதறிப்போன அந்த நபர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஆணுறுப்பை சரி செய்தனர். முதலில் 3 நாள்கள் தீவிர சிகிச்சை வழங்கி பின்னர் டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.
காயம் சரியாகும் வரை சிறுநீர் கழிக்க அவருக்கு catheter முறையில் டியூப் பொருத்தப்பட்டது. பின்னர், சில வாரங்களுக்கு அவர் தொடர் கண்காணிப்பில் இருந்த நிலையில், அவரின் ஆணுறுப்பு சீரானதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு சிறுநீர் கழிக்கவோ, குறி விரைப்பு ஏற்படுவதிலோ எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மெயில் முதல் வீடியோகால் வரை.. உலகத்தை சத்தமில்லாமல் அழிக்கும் இண்டர்நெட் உலகம்!
இருப்பதிலேயே இந்த ரிவர்ஸ் கவ் கேர்ள் பொசிஷன் தான் மிகவும் அபாயகரமானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆணுறுப்பில் ஏற்படும் சுமார் 50 சதவீத முறிவுகளுக்கு இந்த செக்ஸ் பொசிஷன் தான் காரணம் என பிரபல டிக்டாக் மருத்துவர் கரண் ராஜ் தெரிவிக்கின்றார். அதேவேளை 2017ஆம் ஆண்டில் வெளியான Journal of Impotence Research ஆய்வு அறிக்கையின்படி, டாக்கி ஸ்டைல் பொசிஷன் தான் மிகவும் அபாயமானது என்று தெரிவிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indonesia, Penis Health, Sex Fantasies, Sex Positions, Viral News