முகப்பு /செய்தி /உலகம் / சூடானில் உள்நாட்டு போர் - இந்தியர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழப்பு

சூடானில் உள்நாட்டு போர் - இந்தியர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழப்பு

சூடானில் உள்நாட்டு போர்

சூடானில் உள்நாட்டு போர்

Indian dies in Sudan | இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவரும் கொல்லப்பட்டதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

  • Last Updated :
  • Delhi, India

சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையினருக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதலில் இந்தியர் ஒருவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

2019-ம் ஆண்டு சூடான் அதிபர் ஒமர் அல்-பஷீர் நடத்தி வந்த சர்வாதிகார ஆட்சி மக்கள் போராட்டத்தால் அகற்றப்பட்டது. அதன்பின் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், அதிபர் மாளிகையையும் துணை ராணுவப் படையினர் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிரபல தாதா சுட்டுக் கொலை... செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது கும்பல் வெறிச்செயல்... உ.பியில் பயங்கரம்!

top videos

    இதனால், அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. அதிபர் மாளிகை, ராணுவ தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் இரு தரப்பினரிடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. மேலும், நாடு முழுவதும் கலவரம் பரவியுள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில், இந்தியாவை சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவரும் கொல்லப்பட்டதாக சூடானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: External Minister jaishankar