முகப்பு /செய்தி /உலகம் / வெடித்து சிதறும் எரிமலை.. ஹவாய் தீவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை...

வெடித்து சிதறும் எரிமலை.. ஹவாய் தீவுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை...

கிளாயுவா எரிமலை

கிளாயுவா எரிமலை

3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வெடித்துச்சிதறி நெருப்புக்குழம்பை வெளியேற்றி வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • international, Indiaamericaamericaamerica

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிளாயுவா எரிமலை நெருப்பு குழம்பை வெளியேற்றி வருவதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தீவு பகுதிகளில் ஒன்றான ஹவாயில் எண்ணற்ற எரிமலைகள் உள்ளதால், அங்கு தேசிய எரிமலை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் கிளாயுவா எரிமலை கடந்த பிப்ரவரி மாதம் வெடித்துச் சிதறியது. அதையடுத்து, 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வெடித்துச்சிதறி நெருப்புக்குழம்பை வெளியேற்றி வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது... ரிசர்வ் வங்கி ஆளுநர்

 எனினும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லை என கூறியுள்ள எரிமலை கண்காணிப்பகத்தினர், எரிமலை வெடிப்பு சுற்றுலா பயணிகளை கவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனை பார்க்க விரும்புவோருக்காக 24 மணி நேரமும் பூங்கா திறந்திருக்கும் என்றும், அரை மைல் தொலைவில் இருந்து பார்த்து ரசிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், பார்வையாளர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

First published:

Tags: America