முகப்பு /செய்தி /உலகம் / பாகிஸ்தானில் பெண் கல்லறைகள் பூட்டுப் போட்டு பாதுகாக்கப்படுகிறதா? உண்மை தன்மை என்ன?

பாகிஸ்தானில் பெண் கல்லறைகள் பூட்டுப் போட்டு பாதுகாக்கப்படுகிறதா? உண்மை தன்மை என்ன?

சமூக ஊகடங்களில் வைரலாகும் படை

சமூக ஊகடங்களில் வைரலாகும் படை

பாகிஸ்தானில் பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாப்பதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவிவருகிறது. ஆனால், அதன் உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை.

  • Last Updated :
  • intern | pakistanpakistanpakistanpakistanpakistanpakistanpakistan

பாகிஸ்தானில் உயிரிழந்த பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாப்பதாக, சமூக ஊடகங்கள் மூலம் உண்மைத் தன்மை (Fact Check)  கண்டறியப்படாத   தகவல்கள் பரவி வருகின்றன. 

The curse of god why I left islam எனும் புத்தகத்தின் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஹரிஸ் சுல்தான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றும், உயிரிழந்த பெண் சடலங்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்டு பாதுகாக்கும் நிலை இருப்பதாக  கூறி ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.  மேலும், பாகிஸ்தான் கலாசாரத்தை கண்டிக்கும் வகையில் புர்காவுடன் தொடர்புபடுத்தி தன் கண்டன கருத்தை அவர் பதிவிட்டிருந்தார்.

ஆனால், இந்த புகைப்படம் எங்கு, யாரால் எடுக்கப்பட்டது என்ற உண்மை தெரிய வரவில்லை. இருப்பினும்,  பல்வேறு செய்தி நிறுவனங்களும் இந்த செய்தியை கையில் எடுத்துள்ளன.

top videos

    ஆனால்,  பல்வேறு செய்தி நிறுவங்கள் ஒருங்கிணைந்து இத்தகைய தவறான தகவல்களை பரப்பி வருவதாக உண்மைத் தன்மை (Fact Check) கண்டறியும் Mohammed Zubair தெரிவித்துள்ளார்.  செய்தி நிறுவனங்கள் பத்திரிக்கை வழிமுறைகளை சரியாக பின்பற்றாமல், செய்திகளை அடிப்படை ஆதாரமின்றி வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டதாக சொல்லும் பெற்றோர்களிடம் பேசாமல், உண்மை தன்மை கண்டறிய எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

    First published:

    Tags: Pakistan News in Tamil