உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் சர்வதேச விதிகளுக்கு எதிரானது என ஜி7 நாட்டுத் தலைவர்கள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் 49ஆவது ஜி-7 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய ஏழு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜி7 நாட்டுத் தலைவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், 15 மாதங்களுக்கு மேலாக தொடரும் போரால் உலகிற்கே பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் அமைதி நிலவ தேவையான, நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அணு ஆயுத பாதுகாப்பை உறுதி செய்யும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனை மீட்டெடுக்கவும், அதற்கு தேவையான உதவிகளையும் செய்ய முன்வர வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
JUST OUT
G7 leaders' statement on Ukraine pic.twitter.com/iblEWMrxza
— Richard Walker (@rbsw) May 19, 2023
மேலும் உக்ரைனில் அமைதி நிலவ, அந்நாட்டிற்கு முழு ஆதரவை தருவதாகவும், தேவையான நிதி, ஆயுத உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் ஜி-7 நாடுகள் உறுதியளித்துள்ளன.
மேலும் ரஷ்யாவிற்கும் இந்தப் போரை ஆதரிப்பவர்களுக்கும் செலவுகளை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் ஜி-7 நாட்டுத் தலைவர்கள் உறுதியளித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Russia - Ukraine