டிஸ்கவரி சேனல்களில் சில சாகச வீடியோக்களைப் பார்த்திருப்போம். சிலர் பணத்துக்காக இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுவர். சிலர் சாகசங்களில் ஈடுபடுவதையே பொழுதுபோக்காக கொண்டிருப்பார்கள். அப்படி ஜிம்பாபேவைச் சார்ந்த ஃபாரஸ் கேலண்ட் இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுவதை பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்.
ஃபாரஸ்ட் கேலண்ட்டும் அவரது குழுவும் அழிந்துவிட்டதாக கூறப்படும் விலங்குகளைத் தேடி வனத்திற்குள் செல்வார்கள். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் ஃபாரஸ்ட் கேலண்ட், கடந்த 2019 ஆம் ஆண்டு அழிந்துபோனதாக கருதப்படும் சில முதலை இனங்களை தேடிச் செல்லும்போது நடந்த சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதனை தேடிச் செல்லும்போது அபாயம் ஒன்றில் சிக்கியிருக்கிறார்.
இதையும் படிக்க | இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக தொடரும் மாபெரும் மக்கள் போராட்டம்- பின்வாங்குவாரா நெதன்யாகு
அமேசான் வனத்துக்குள் அழிந்துவிட்டதாக கூறப்படும் முதலை இனத்தைத் தேடிச் செல்லும் போது கடுமையாக தாகம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்கே இருந்த பழங்குடியினர் அவருக்கு பச்சை நிற திரவம் ஒன்றை அளித்து காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த திரவமானது குரங்கின் எலும்பில் இருந்து உருவாக்கப்பட்டதாக அவருக்கு தெரியவந்திருக்கிறது. அதனை குடித்ததும் குளோரினை அவரது மூளைக்குள் செலுத்தியது போன்று உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
மேலும் கொகைனைலிருந்து உருவாக்கப்பட்ட திரவம் போன்று அது இருந்திருக்கிறது. ஆனால் அதை குடித்ததன் காரணமாகவே தனது வாழ்க்கை காப்பாற்றப்பட்டதாகவும் ஆனால் இன்றுவரை அதனால் ஏற்பட்ட உணர்வை மறக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Viral