முகப்பு /செய்தி /உலகம் / எனக்கு எதுவும் தெரியாது.. ஆபாச பட நடிகை விவகாரத்தில் ட்ரம்ப் வாக்குமூலம்

எனக்கு எதுவும் தெரியாது.. ஆபாச பட நடிகை விவகாரத்தில் ட்ரம்ப் வாக்குமூலம்

ட்ரம்ப்

ட்ரம்ப்

இந்த வழக்கு மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Inter, IndiaAmericaAmerica

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில், தனக்கு எதுவும் தெரியாது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்டு ட்ரம்ப் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப் கடந்த 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டார். இந்த தேர்தலுக்கு முன்பு, ஸ்டோர்மி டேனியல்ஸ் என்ற ஆபாசப் பட நடிகையுடன் தனக்கு இருந்த தொடர்பை மறைப்பதற்காக, அவருக்கு 1,30,000 டாலர்கள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதை ஸ்டோர்மியே ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பணம் கொடுத்ததோடு அதை வர்த்தகக் கணக்கில் காட்டியதாக கிராண்ட் ஜூரி என்னும் மக்கள் பிரதிநிதிக்கள் குழு டிரம்ப் மீது குற்றம் சாட்டியது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் ஒருவர் தனிப்பட்ட விவகாரத்தில் பணம் கொடுத்தது சட்டவிரோதம் இல்லை என்ற போதும், அதை தனது பிரசார செலவில் காட்டியது சட்டப்படி குற்றமாகும். எனவே. இந்த புகாரின் பேரில் நியூயார்க் நீதிமன்றம் ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ட்ரம்ப் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அப்போது, ஆபாச பட நடிகைக்கு தான் பணம் ஏதும் கொடுக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில், தான் எந்தவொரு தவறும் இழைக்கவில்லை எனவும் விளக்கம் அளித்தார். இந்த கருத்துகளை நீதிமன்றம் பதிவு செய்து கொண்டதை அடுத்து, டிரம்ப் புறப்பட்டுச் சென்றார். மேலும், இந்த வழக்கு மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவதில் எந்த சிக்கலும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

First published:

Tags: America, Donald Trump, Trump