முகப்பு /செய்தி /உலகம் / பின்லாந்து மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா..!

பின்லாந்து மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா..!

பின்லாந்து

பின்லாந்து

பின்லாந்து, நேட்டோவில் இணைந்திருப்பது உலக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

  • Last Updated :
  • Inter, IndiaFinland

ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் சூழலில், ரஷ்யாவின் எல்லையில் உள்ள பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ராணுவ அமைப்பாக விளங்குகிறது நேட்டோ.... அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுடன், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 28 ஐரோப்பிய நாடுகளும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன..இந்த நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நேட்டோவின் 31வது நாடாக தன்னை இணைத்துக்கொண்டது பின்லாந்து.

ரஷ்யாவுடன் சுமார் ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் பின்லாந்து, நேட்டோவில் இணைந்திருப்பது உலக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், ரஷ்யாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில், நேட்டோவின் உறுப்பு நாடுகள் பின்லாந்து எல்லைக்கு ராணுவ துருப்புகளை அனுப்பக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி நேர்கையில், தகுந்த பதிலடி அளிப்போம் என ரஷ்யாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: எனக்கு எதுவும் தெரியாது.. ஆபாச பட நடிகை விவகாரத்தில் ட்ரம்ப் வாக்குமூலம்

அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில், உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வானது.தற்போதைய சூழ்நிலையை உற்றுநோக்கும்போது பின்லாந்து மக்களின் மகிழ்ச்சி நீடிக்குமா என்பது சந்தேகமே.

top videos
    First published:

    Tags: NATO Force, Tamil News